“மக்களுக்கு சில்க் ஸ்மிதா பற்றிய எண்ணமே வேற மாதிரி இருக்கு!” – `சில்க் ஸ்மிதா’ பட இயக்குநர் ஜெயராம் | Actress Silk Smitha Biopic Director Jayaram explains about the movie

Estimated read time 1 min read

இதன் பிறகு ‘சில்க் ஸ்மிதா’ பயோகிராஃபி திரைப்படம் குறித்து பேசத் தொடங்கிய இயக்குநர், “நடிகை சந்திரிகா ரவிவை சில்க் ஸ்மிதாவோட ஒப்பிட்டு சோசியல் மீடியால முன்னாடியே போட்டுட்டு இருந்தாங்க. அவங்ககிட்டையும் நிறையா பேர் சொல்லியிருக்காங்க. சில்க் ஸ்மிதாவோட லைஃப் ஸ்டோரிய படமாகப் பண்ணலாம்னு அவங்கதான் ஐடியா சொன்னாங்க.

சந்திரிகா ரவி

சந்திரிகா ரவி

அதே ஐடியாவைத் தயாரிப்பாளர்கிட்டையும் சொன்னாங்க. தயாரிப்பாளர்கூட நானும் சில புராஜெக்ட்ஸ் வேலை பார்த்திருக்கேன். அவங்க இந்த ‘சில்க் ஸ்மிதா’ படம் பண்றது தொடர்பாக என்கிட்ட பேசுனாங்க. அங்கிருந்து பல ரிசர்ச் வேலைகள் தொடங்குச்சு. சில்க் ஸ்மிதாவின் வாழ்கையோட முக்கியமான பக்கங்களை கவர் பண்ணணும்னு திட்டமிட்டிருக்கோம். இப்போ திரைப்படத்தோட முதற்கட்ட பணிகள் நடந்துட்டு இருக்கு. கூடிய விரைவுல திரைப்படத்தோட படப்பிடிப்பைத் தொடங்கிடுவோம்” என்றவரிடம் ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் தொடர்பான கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு, “‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் சில்க் ஸ்மிதாவோட வாழ்க்கைல இருந்து இன்ஸ்பயராகி புனைவாகச் சில விஷயங்களைப் பண்ணியிருப்பாங்க. ஆனா, இத்திரைப்படம் முழுசா அவங்களோட வாழ்க்கையை டாக்குமென்ட் பண்ற மாதிரி இருக்கணும்னு திட்டம் வச்சிருக்கோம். இன்றைய தலைமுறை மக்களுக்கு சில்க் ஸ்மிதா பற்றிய எண்ணமே வேற மாதிரி இருக்கு. அதையும் தாண்டி அவங்க வாழ்க்கையில பல விஷயங்கள் இருக்கு. எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையா இருக்கு. அதுமட்டுமல்ல, நடிகர்கள் தற்கொலை பண்ற விஷயம் புதுசு கிடையாது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours