பிரதீப்பிற்கும், அவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையின் போதும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிக் பாஸிடம் கோரிக்கை விடுத்தார். இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே விசித்ராவிடம் தன் குடும்ப சூழல் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த சூழலில் இன்று அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து பரணி வெளியேறியது போலவே சேரின் உதவியுடன் பைப் வழியாக ஏறி வீட்டை விட்டு வெளியேற முயற்சித்து இருக்கிறார். இதனைப் பார்த்த மணி அவரிடம் பேசி அவர் கீழே இறங்க உதவியும் செய்திருக்கிறார்.
இது தொடர்பாக கூல் சுரேஷை அழைத்துப் பேசியிருக்கிறார் பிக் பாஸ். அவரிடம் வீட்டில் சில பிரச்னைகளை தீர்த்து வைக்காமல் வந்து விட்டேன். வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அவர் இத்தனை நாட்கள் இந்தப் போட்டியில் தாக்குப்பிடித்தது தொடர்பாகவும், அவர் பாதியிலேயே வீட்டை விட்டு வெளியேறினால் அது அவருடைய குடும்பத்தை பாதிக்கும், அவர்களுக்காகவாவது போட்டியில் ஜெயித்து விட்டு செல்லுங்கள் எனவும் பிக் பாஸ் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
+ There are no comments
Add yours