Director Ameer Said Thanks To Suriya For 21 Years Of Mounam Pesiyadhe | சூர்யாவிற்கு திடீர் என நன்றி தெரிவித்த இயக்குனர் அமீர் ஏன் தெரியுமா

Estimated read time 1 min read

அமீர் தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து தற்போது நடிகராக மாறி உள்ளார்.  அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன், மவுனம் பேசியதே, ராம், ஆதி பகவான் போன்ற ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாக இருக்கும்.  மேலும் வடசென்னை, யோகி போன்ற படங்களில் நடிகராகவும் அசத்தி இருப்பார்.  இந்நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் அமீர் இடையே பிரச்சனை எழுந்தது.  ஒரு பேட்டியில் இயக்குனர் அமீரை ஞானவேல் ராஜா தரைகுறைவாக பேசி இருந்தார்.  அங்கிருந்து கிளம்பிய பிரச்சனை மிகப்பெரிய அளவில் வளர்ந்தது.  பிறகு அமீருக்கு ஆதரவாக சரிக்குமார், சமுத்திரக்கனி, சேரன் உள்ளிட்டோர் குரல் கொடுத்து இருந்தனர்.  தற்போது மௌனம் பேசியதே பேசிய படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அனைவருக்கும் நன்றி கூறி உள்ளார் அமீர்.  

மேலும் படிக்க | எதிர்பார்ப்பை எகிற செய்யும் டங்கி! வெளியானது ஓ மஹி பாடல்!

இது தொடர்பாக அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது நான் சோர்ந்து விடாமலும், துவண்டு விழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்கு அளித்த தமிழக ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தை பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் மௌனம் பேசியதே வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. 

இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை நோக்கி, சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நலமானது இல்லை, அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரை கனவை நினைவாக்கியர் மௌனம் பேசியதே திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் பிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும் என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு என் நன்றிகள். 

என்னுடைய திரை பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில் நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும், இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரையரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக மௌனம் பேசியதே ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.  அமீர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் படிக்க | 73 வயது… உலகத்திற்கே சூப்பர்ஸ்டார்.. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours