நடிகர் டாக்டர் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
09 டிச, 2023 – 13:21 IST

அக்குபஞ்சர் வைத்தியரான சீனிவாசன் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பல படங்களில் காமெடியனாக நடித்தார். சொந்தமாக படம் எடுத்து அதில் ஹீரோவாக நடித்தார். பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தார். இந்து நிலையில் மீண்டும் ஒரு மோசடி வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு15 கோடி கடன் வாங்கித் தருவதாகவும் அதற்கான ஆவண செலவுக்காக 14 லட்சம் தர வேண்டும் எனக் கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு முனியசாமியிடம் 14 லட்சம் பெற்றுள்ளார். பின்பு போலியான ஒரு காசோலையையும் கொடுத்துள்ளார். கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட 14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் சீனிவாசன் மீது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முனியசாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+ There are no comments
Add yours