Actor Soori Total Net Worth And Salary Per Movie Check Details Here

Estimated read time 1 min read

துணை நடிகராக நுழைந்து காமெடி நடிகராக வளர்ந்து, தற்போது படத்தின் ஹீரோவாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. காமெடியனாக நடித்துக்கொண்டிருந்தபோது ஒரே டைமில் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் தற்போது ஹீரோவான பிறகு, தெளிவான கதைகளை கேட்டு வெகு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

‘பரோட்டா’ சூரி:

2009ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தை பலர் மறந்திருந்தாலும், அதில் இடம் பெற்றிருந்த ‘பரோட்டா’ காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டோம். அதற்கு காரணம், 50 பரோட்டாவை அலேக்காக விழுங்கி ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் சூரிதான். பார்ப்பதற்கு ஒல்லியான தோற்றத்துடன் இருக்கும் இவர், இந்த காமெடி சீனில் நடித்த போது உண்மையாகவே 17 பரோட்டாக்களை சாப்பிட்டாராம். இப்படி, இத்துணூண்டு பரோட்டா மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான சூரி பிறந்ததது எங்கு தெரியுமா? அந்த பராேட்டாவிற்கு பிரபலமான மதுரையில்தான். கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்பு, சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று லட்சியத்துடன் சென்னைக்கு வந்த இவரை, சினிமாவும் அன்பு கரம் கொண்டு வரவேற்றுக்கொண்டது.

ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த இவருக்கு பெரிய வாய்ப்பை கொடுத்த படம்தான் ‘வெண்ணிலா கபடிக்குழு’. அதன் பிறகு பல முன்னணி ஹீரோக்களுக்கு நண்பனாக, எதிரியாக என காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துவிட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், ஜில்லா, ரஜினி முருகன் போன்ற படங்கள் இவரது காமெடிக்காகவே ஓடின.

ஹீரோவாக ப்ரமோஷன்..!

பல ஆண்டுகளாக காமெடியனாக நடித்துக்கொண்டிருந்தவரை திடீரென்று பிடித்து விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துவிட்டார், வெற்றிமாறன். அதுவரை இவரை காமெடியன் சூரியாக பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இப்படத்தின் மூலம் சூரியின் சீரியஸான முகத்தை பார்த்தனர். அந்த அளவிற்கு அழுத்தமிகு நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சூரி, தற்போது ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது நண்பரும் நடிகருமான சிவகார்த்திகயேன் தயாரித்து வழங்குகிறார். கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத்ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இதன் வேலைகள் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது. 

மேலும் படிக்க | படையப்பா நீலாம்பரியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட கே.எஸ்.ரவிகுமார்! எந்த விஷயத்தில் தெரியுமா?

சம்பளம்..சொத்து மதிப்பு..

தற்போது சினிமாவில் ஜொலிக்கும் சூரி, துணை நடிகராக இருந்த காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளார். இவருக்கு அப்போது ஆதரவளித்த ஒரே நடிகர், போண்டா மணி. இவருக்கு அவர்தான் பக்கபலமாக இருந்து பல நேரங்களில் தன் வீட்டிலேயே தங்க வைத்துள்ளாராம். பல நேரங்களில் சாப்பிடாமல் கூட கஷ்டப்பட்டுள்ளதாகவும், சினிமா வாய்ப்பு தேடி பல இடங்களில் அலைந்துள்ளதாகவும் அவரே சில நேர்காணல்களில் கூறியிருக்கிறார். இந்த அளவிற்கு சிரமப்பட்டு தற்போது மேன்மைக்கு வந்திருக்கும் சூரிக்கு, தற்போது சென்னையில் 2 சொந்த வீடுகளும், 3 சொகுசு கார்களும் உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, ஹோட்டல் தொழில், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிலும் முதலீடு செய்துள்ளார். 

காமெடியனாக நடித்து கொண்டிருந்த போது வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தை விட ஹீரோவாக நடிக்க வந்த பிறகு சூரிக்கு சம்பளம் பன்மடங்காக உயர்ந்திருக்கிறது. இவர், தான் கடைசியாக நடித்த விடுதலை படத்திற்காக ரூ.30 லட்சம் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவருக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. அடுத்து நடிக்கும் கொட்டுக்காளி படத்திற்காக ரூ.1 கோடியை இவர் சம்பளமாக வாங்கியுள்ளாராம். சினிமா மட்டுமல்லாமல் இன்னும் பல பிசினஸில் முதலீடு செய்து சம்பாதித்து வரும் சூரிக்கு மொத்தம் ரூ.40 முதல் 50 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | நல்ல விமர்சனங்களை பெற்று வரும் கான்ஜூரிங் கண்ணப்பன்! நம்பி தியேட்டருக்கு போலாமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours