பெங்களூருக்கு வந்த நானியை வரவேற்று உபசரித்த சிவராஜ்குமார்
06 டிச, 2023 – 11:11 IST
சமீபகாலமாக எல்லா மொழிகளிலும் பான் இந்தியா படங்களின் உருவாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதில் நடித்துள்ள முன்னணி நட்சத்திரங்கள் ஒவ்வொரு மொழியை சேர்ந்த முக்கிய நகரங்களுக்கும் சென்று தங்களது படத்தை புரமோஷன் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது ஹாய் நான்னா படத்தில் நடித்துள்ள நானி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இந்த படத்தின் கன்னட வெர்ஷனின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்ற நானி கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மகிழ்ந்துள்ளார். அவரை வரவேற்று காலை விருந்து உபசரித்த சிவராஜ் குமார் படம் குறித்த விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார். இவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்ல தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆருடன் நடந்த சந்திப்பு குறித்த ஒரு ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றையும் நானி சோசியல் மீடியாவில் வெளியிட இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours