Serial Updates: வெள்ளம் குறித்து பகிர்ந்த தீபக்; ஓடோடி வந்து உதவி செய்யும் `அறந்தாங்கி' நிஷா!

Estimated read time 1 min read

மிக்ஜாம் புயலின் பாதிப்பு சென்னை மக்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது.  வடியாத நீரினால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் `தமிழும் சரஸ்வதியும்’ தொடர் கதாநாயகன் தீபக் இன்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், `சில இடங்கள் பாதிக்கப்படல. சில இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கு. அப்படி பாதிக்கப்பட்ட இடங்களில் நானும் இருக்கேன். சென்னை முழுக்கவும் கஷ்டமான சூழலில் தான் எல்லாரும் இருக்கிறோம். இந்த அளவுக்கான தண்ணீரில் நடந்து தான் இப்ப ஷூட்டிங்கிற்கு கிளம்புறேன்.

`தமிழும் சரஸ்வதியும்’ தீபக்

தண்ணீரில் கரண்ட் வயர் எதுவும் இருக்கக் கூடாது அது ஒண்ணு தான் பயமா இருக்கு. எல்லாரும் வெளியில் போகாதீங்கன்னு சொல்றாங்க.. அப்படி போகாம இருக்க முடியுமா? ஷூட்டிங் போகணும், டெலிகாஸ்ட் ஆகணும்! வேலை செய்யாம இருக்க முடியுமா? நாங்க அரும்பாக்கம் மெயின்ல இருக்கோம்… எங்களுக்கே இந்த நிலைமை. ஆயிரக்கணக்கணக்கான மக்கள் இங்க வாழுறாங்க. எல்லாருக்கும் கஷ்டம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`ரோஜா’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் ஸ்மிருதி. `Aa Bhi Ja O Piya’ என்கிற ஹிந்தி திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார். பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கார்த்திகை தீபம்’ தொடரில் ஸ்மிருதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்மிருதி

இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `மிஸ்டர் மனைவி’ தொடரில் `கவி மலர்’ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திருச்சியில் இருந்து சென்னை வந்துள்ளார் அறந்தாங்கி நிஷா. அதுகுறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், `நேற்றிலிருந்து வண்டிக்கு முயற்சி பண்ணினோம். சென்னைன்னு சொன்னதும் யாரும் வண்டி கொடுக்க மாட்டேன்றாங்க. நம்மளுடைய காரிலேயே மக்களுக்குக் கொடுப்பதற்காக பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்னு அத்தியாவசியப் பொருட்கள் எல்லாத்தையும் ஏத்திட்டோம்.

அறந்தாங்கி நிஷா

சென்னைக்குன்னு சொன்னா யாரும் வண்டி தர முன்வர மாட்டேன்றாங்க. தயவுசெய்து வண்டி கொடுத்து உதவுங்க. தாம்பரத்தில் 1000 பேருக்கு உணவு ஏற்பாடு பண்ணச் சொல்லியிருக்கோம். டாடா ஏசி வண்டி காலையில் 11 மணிக்கு மேல தான் தர முடியும்னு சொல்லியிருக்காங்க. கண்டிப்பா எங்களால முடிஞ்ச உதவியை நாங்க பண்ணுவோம்!’எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வெற்றி வாகை சூட்டப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடையே மிகுதியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் எவிக்‌ஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தப் போட்டியாளரும் இந்த வாரத்தில் வெளியேற்றப்படப் போவது இல்லை என விஜய் தொலைக்காட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ்

அதில், `மிக்ஜாம் புயலின் காரணமாக, பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது!’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours