Aamir Khan: தாயின் சிகிச்சைகாக சென்னை வந்த அமீர் கான்; வெள்ளத்தில் கவனமாக மீட்பு! |news about aamir khan’s Chennai visit

Estimated read time 1 min read

இவர்களின் நிலையை கேள்விப்பட்ட அஜித், பொதுவான நண்பர் ஒருவர் மூலம் விஷ்ணுவையும், அமீர் கானும் போக்குவரத்து உதவிகள் செய்து கொடுத்தார். இது குறித்து விஷ்ணுவும், “‘பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் மனப்பான்மை குணம் கொண்ட நடிகர் அஜித் சார் எங்களைப் பார்க்க வந்தார். எங்களுக்கும், எங்கள் வில்லா நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார். லவ் யூ அஜித் சார் ” என தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.

மீட்பு பணியில்

மீட்பு பணியில்

இந்நிலையில் விஷ்ணு விஷாலும், அமீர் கானும் இப்போது எப்படி இருக்கிறார்கள்? காரம்பாக்கம் பகுதியில் அமீர் கான் வீடு எடுத்தது ஏன் என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல் இனி..

”விஷ்ணுவும், அமீர் கானும் இப்போது நன்றாக இருக்கின்றனர். விஷ்ணுவின் ஏரியாவில் அமீர் கான் மாட்டிக்கொண்டது எப்படி என்றும் பலரும் புருவம் உயர்த்தி வந்தனர். கடந்த ஆண்டு அமீர் கான் அம்மா ஜீனத் உசைனுக்கு உடல் நலக் குறைவு எற்பட்டது. இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அமீர் கான் அட்மிட் செய்துள்ளார். அம்மாவை கவனிப்பதற்காக அமீர் கடந்த மூன்று மாதங்களாக சென்னையில் இருந்து வருகிறார். அம்மாவை சென்னை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும், இங்கே தங்குவதற்கும் அவருக்குத் தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் விஷ்ணு விஷாலும் அவரின் நண்பர்களும் வழங்கி வருகின்றனர்.

அஜித்துடன்

அஜித்துடன்

விஷ்ணு விஷாலின் காரப்பாக்கம் வில்லாவில் தான் அமீர் கானும் தங்கியிருக்கிறார். சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள அஜித்தின் வீடருகில், விஷ்ணு விஷாலுக்கும் ஒரு வீடு இருக்கிறது. மழை சமயத்தில் ஈசிஆரில் தான் விஷ்ணு தங்கியிருக்கிறார் என அஜித் நினைத்திருந்தார். இந்நிலையில் விஷ்ணுவின் ட்வீட்டை பார்த்ததும், அதிர்ச்சியாகிவிட்டார். உடனே அவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம், போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்தார். இப்போது ஈசிஆரில் உள்ள இன்னொரு வீட்டில் விஷ்ணு தங்கியுள்ளார். அமீர் கானும் அங்கே தான் ஓய்வில் இருக்கிறார்.” என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours