Cyclone Michaung | Why Netizens React For Actor Vishal Video| Chennai Flood: விளம்பரம் தேடிய விஷால்.. பதம் பார்த்த நெட்டிசன்கள்

Estimated read time 3 min read

Actor Vishal Vs Chennai Mayor: மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 47 செ.மீ கனமழை பெய்ததால், சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) மாலை முதல் திங்கள்கிழமை (டிசம்பர் 4) இரவு வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல இடங்களிலும் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்கு உள்ளே வெள்ள நீர் புகுந்துவிட்டதால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மின்சாரம் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மறுபுறம் தமிழக அரசு தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 4) நடிகர் விஷால், தனது சமூக வலைதளப் பக்கமான X தளத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரல் ஆகி வருகிறது.

X தளத்தில் விஷால் கூறியது

“அன்புள்ள சென்னை மேயர் திருமதி பிரியா ராஜன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன். 

நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன், உங்கள் குடும்பத்துடன் வீட்டில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன், குறிப்பாக வடிகால் நீர் உங்கள் வீடுகளுக்குள் நுழையாது மற்றும் மிக முக்கியமாக, எந்தவித சிக்கலும் இல்லாமல் உணவு மற்றும் மின்சாரம் கிடைக்கும் என்றும் நம்புகிறேன். நீங்கள் இருக்கும் அதே நகரத்தில் வசிக்கும் குடிமகனாகவும், உங்களுக்கு வாக்களித்த வாக்காளராகவுமான நாங்கள் அதே நிலையில் இல்லை. 

மேலும் படிக்க – 2015 செயற்கை வெள்ளம்… இது இயற்கை வெள்ளம் – ஸ்டாலினின் விளக்கம் என்ன?

மழைநீர் வடிகால் திட்டம் முழுவதும் சிங்கப்பூருக்காகவா அல்லது சென்னைக்காகவா?” என்று கேள்வி எழுப்பும் நடிகர் விஷால், இது தொடர்பாக மேலும் தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.

”2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மழைவெள்ளத்தின் போது ஏற்பட்ட துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் சாலைக்கு வந்தோம், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் மோசமான நிலையைப் பார்ப்பது பரிதாபமாக இருக்கிறது என்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது. ஏன் என்பதை எங்களுக்குத் தெரிவிக்க முடியுமா?”

”இந்த நேரத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக நாங்கள் தொடர்ந்து உதவி செய்கிறோம்ம், ஆனால் இந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதியின் அனைத்து பிரதிநிதிகளும் வெளியே வந்து, மக்களின் பயம் மற்றும் துயரத்தை துடைத்து நம்பிக்கை ஊட்டி, மக்களுக்கு உதவியை செய்ய விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்”.

”நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதும்போது வெட்கத்தால் தலை குனிந்தேன். உதவிக்காக எதிர்பார்ப்பது என்பது ஒரு அதிசயத்திற்காக காத்திருப்பதா என்ற கேள்வியும், குடிமக்களுக்கான கடமை என்றால் என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்”.

மேலும் படிக்க – அன்புள்ள சென்னை மேயருக்கு! விஷால் எழுதிய மிக்ஜாங் புயல் பிரச்சனை வீடியோ வைரல்

வீடியோவில் விஷால் கூறியது..

வணக்கம். புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 

2015-ம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம்.

8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு/வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. 

நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.

என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா அச்சத்தில் உள்ளனர். இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்து விடாதீர்கள். வந்து உதவுங்கள்” என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இவரின் வீடியோ X தளத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க – மிக்ஜாம் புயலின் கோர ஆட்டம்… ஊர் முழுக்க தண்ணீர் – சென்னையின் இப்போதைய நிலை என்ன?

நடிகர் விஷாலுக்கு ஆதரவும் எதிர்ப்பும்.. 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்க – சென்னையில் 4 ஆயிரம் கோடிக்கு வடிகால் அமைத்த லட்சணம் இதுதானா? திமுகவுக்கு செல்லூர் ராஜூ கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours