Bigg Boss 7: மீண்டும் அழைத்த சேனல்; வாய்ப்பை ஏற்க மறுத்தாரா வினுஷா? கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

Estimated read time 1 min read

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ல் முதல் வைல்டு கார்டு என்ட்ரியாக ஒரே நேரத்தில் ஐந்து போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் போனது நினைவிருக்கலாம்.

தினேஷ், அர்ச்சனா, பிராவோ, அன்ன பாரதி, கானா பாலா ஆகிய அந்த ஐந்து பேரில் இப்போது தினேஷும் அர்ச்சனாவும்தான் நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். இவர்கள் ஆரம்பத்திலேயே ஃபார்முக்கு வந்து வலுவான போட்டியாளர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார்களெனச் சொல்லலாம். தொடர்ந்து இரண்டாவது வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பழைய போட்டியாளர்கள் மூன்று பேர் நிகழ்ச்சிக்குள் செல்வார்களென புரோமோ வெளியானது. வெவ்வேறு காரணங்களுக்காக அனன்யா, விஜய் வர்மா மற்றும் வினுஷா ஆகிய மூவரையும் தான் சேனல் வைல்டு கார்டு போட்டியாளர்களாக அனுப்ப முடிவு செய்துள்ளது என நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்

மேலும் இவர்களில் வினுஷா தேவி மட்டும் திரும்பவும் நிகழ்ச்சிக்குள் வரத் தயக்கம் காட்டுவதாகவும், அப்படி அவர் வராமல் போனால் அவருக்குப் பதில் யுகேந்திரன் வரலாமெனவும் நமது செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.ஆனால் கடந்த வார எவிக்‌ஷன் ஷூட்டிங்கில் அக்‌ஷயா மற்றும் பிராவோ இருவரும் வெளியேற விஜய் வர்மா, அனன்யா இருவரும் நிகழ்ச்சிக்குள் வந்தார்கள்.

மூன்று போட்டியாளர்கள் உள்ளே நுழைவார்களெனச் சொல்லப்பட்ட நிலையில் இரண்டு பேர் மட்டுமே வந்தது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க என்ன நடந்தது என நிகழ்ச்சி தொடர்புடைய வட்டாரத்தில் விசாரித்தோம்.

’பிக் பாஸ்’ சிலருக்கு ஆஹா ஓஹோன்னு விளம்பரம் தந்திருக்கு. ஓவியாவை உதாரணம் சொல்லலாம். சிலருக்கு கடை திறப்பு, வெளிநாட்டு நிகழ்ச்சிகள்னு வருமானத்துக்கு உதவி செய்கிற வகையில ‘பரவால்ல’ ரகம். ஆனால் கொஞ்சம் பேரை ‘ஏண்டா அந்த நிகழ்ச்சிக்குப் போனோம்’னு நினைக்கிற அளவுக்கு டேமேஜ் பண்ணிடுச்சு. வினுஷா இதில் மூணாவது ரகம்.

அவங்க நிகழ்ச்சிக்குள் இருந்தவரைக்கும் ‘உள்ளே ஒண்ணுமே பண்ண மாட்டேங்குறாங்களே’னு வெளியில இருந்தவங்க பேசினாங்க. எவிக்‌ஷன் ஆன போதும் ‘மிக்சர்’ பொட்டலம் போஸ்ட் போட்டுச் சேனலே கலாய்ச்சது. சேனலே இப்படிச் செஞ்சது இவர்களை ரொம்பவே காயப்படுத்திடுச்சு. கொஞ்ச நேரத்துல அந்தப் போஸ்ட்டை நீக்கிட்டாங்கன்னாலும் பட்ட காயம் காயம்தானே? வெளியில வந்த பிறகுமே அந்த வீட்டுக்குள் இருந்த நிக்சன் முதலான சிலர் உருவக்கேலி செய்ய, அதுவுமே அவங்க மனசை ரொம்பவே காயப்படுத்திடுச்சு.

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7

வெளியில வந்து பழைய எபிசோடுகளையெல்லாம் பார்த்ததுல சக போட்டியாளர்கள் சிலர் அடிச்ச கமெண்டுகளையெல்லாம் பார்த்து நொந்து போனாங்கனு தெரிய வந்தது. இந்தச் சூழ்நிலையிலதான் மறுபடியும் வைல்டு கார்டு என்ட்ரிக்கான வாய்ப்பு போயிருக்கு. ஏற்கெனவே ரொம்பவே நொந்து போன நிலையில இருந்ததாலதான் இந்த முறை வர விருப்பமில்லைனு சொல்லிட்டதாச் சொல்றாங்க’’ என்கிறார்கள் இவர்கள்.

’சரி, யுகேந்திரனுமா வாய்ப்பை மறுத்தார்’ என்ற கேள்வியையும் அவர்கள் முன் வைத்தோம்.

‘யுகேந்திரன் முதல் வாரத்துலயே வெளியேறி இருக்க வேண்டியது. ஆனா ’வெளிநாட்டுல இருந்து இந்த நிகழ்ச்சிக்குன்னு வந்தவரை உடனே வெளியில அனுப்பனுமா’ எனக் கேட்டு அவருக்காக ஸ்ட்ராங் ரெகமண்டேஷன் செய்தாங்க சிலர். ஆனால் அவரோ பிரதீப் வெளியேறியப்ப, அவருக்கு ஆதரவா நடந்துகிட்டார். அதனாலதான் அவர் திரும்ப நிகச்சிக்குள் வர்றதுலயும் சிக்கல் வர, ரெண்டு பேர் மட்டுமே வந்தாங்க’’ என்கிறார்கள்.  .  

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours