“இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் வேணாம். நீங்க செய்ய வேண்டியது…” – சமுத்திரக்கனி காட்டம் | Samuthirakani on Gnanavel Raja’s apology towards Ameer issue

Estimated read time 1 min read

ஆனால் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் மீது வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து சரியான விளக்கமளிக்கவில்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறு என்று ஒப்புக்கொள்ளாமல் மொட்டையாக ‘புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று கூறுவதை ஏற்கமுடியாது என்று பலரும் கூறிவருகின்றனர். அவ்வகையில் இயக்குநர் சசிகுமாரும், ஞானவேலின் இந்த வருத்தத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்துத் தற்போது சமுத்திரக்கனியும் ஞானவேலின் வருத்தத்தை ஏற்க மறுத்து, “பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது, எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ. அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!

நீங்க கொடுத்த அந்தக் கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்..!அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா… கடனா வாங்குன நிறைய பேருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்… அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க… நீங்கதான், ‘அம்பானி பேமிலியாச்சே..!’ காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி!” என்று கூறியுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours