தனுஷின் இந்த ட்வீட்டை ரீவீட் செய்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் சுந்தர் ராமு. அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ ‘3’ படமும், ‘மயக்கம் என்ன’ படமும் என் வாழ்க்கையை மாற்றியது. இந்த இரண்டு படங்களிலும் நிறைய புதுமைகளும், நுணுக்கங்களும் இருந்தன. அதனை நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக புரிந்துக்கொண்டிருக்க வேண்டும். நம் காலத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷிடம் இருந்து, ஒரு நடிகனாக கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இருந்தன.
இரண்டு படங்களிலும் சில குறைபாடுகள் இருந்தன. அவை இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கலாம். இருப்பினும் வாய்ப்புகள், அனுபவம் மற்றும் அவர்கள் எனக்காக திறந்த கதவுகளுக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இரண்டு படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினர்களும் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானவர்களாகத்தான் இருப்பார்கள். மீண்டும் இப்படம் திரையரங்கிற்கு வந்ததில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours