Fight Club: “இது எனக்கு மாநகரம் மேடை மாதிரி!”- நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்; கண் கலங்கிய `உறியடி’ விஜய்! | Fight Club movie teaser launch highlights

Estimated read time 1 min read

இந்த நிகழ்வில் பேசிய இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா, “எங்களுடைய ரீல் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை 2019-ல ஆரம்பிச்சோம். விஜய்குமார்கூட சேர்ந்து வேலைப் பார்த்ததுல ரொம்பவே சந்தோஷம். விஜய்குமார் ஒரு படம் பண்ணும் போது நிச்சயம் அதுல சில விஷயங்கள் இருக்கும்ன்னு சொல்லி, லோகேஷ் கனகராஜே நான் இதை வழங்குறேன்னு சொன்னார். இந்தப் படத்தை ‘லியோ’ படப்பிடிப்பு நடந்துட்டு இருக்கும் போது வந்து பார்த்தார். லோகேஷ் மட்டுமல்ல, ‘லியோ’ படக்குழு பலரும் வந்து ‘ஃபைட் கிளப்’ படத்தைப் பார்த்தாங்க. இந்தத் திரைப்படத்தின் உலகம் நிச்சயமாக உங்களை ஏமாற்றாது” என்றார்.

இதனையடுத்து வந்து பேசிய இத்திரைப்படத்தின் கதாநாயகி மோனிஷா, “இத்திரைப்படம் பல சினிமா காதலர்களால சேர்ந்து உருவாகியிருக்கு. எனக்குத் திரைப்பட இயக்குநராகனும்னுதான் ஆசை. மலையாளத்துல ரெண்டு படங்களுக்குத் துணை இயக்குநராக வேலைப் பார்த்திருக்கேன். ‘உறியடி’ திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜய்குமாரும் எனக்கு எப்பவும் ரொம்ப உறுதுணையாக இருப்பார். அவர்கிட்ட இருந்து பல விஷயங்கள் நான் கத்துக்கிட்டேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கேரளாவில் அதிகப்படியான ரசிகர்கள் இருக்காங்க. நானும் ஒரு ரசிகையாக ‘லியோ’ படத்தோட முதல் காட்சி பார்த்தேன்” எனப் பேசி முடித்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours