விருதுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து எம்மி விருது குழுவினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார் விர் தாஸ். ‘Vir Das: Landing’ என்ற இந்த இந்திய மற்றும் அமெரிக்க கலாசாரங்களை முன்னிறுத்தி விர் தாஸின் வாழ்க்கைப் பயணத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.
2021-ம் ஆண்டும் விர் தாஸ் தனது ‘டு இந்தியா’ என்ற காமெடி தொடருக்காக எம்மி சர்வதேச விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அந்த முறை அவருக்கு விருது கிடைக்கவில்லை.
அதே போலச் சர்வதேச எம்மி இயக்குநரக (Directorate) விருதினைப் பிரபல இந்தித் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏக்தா கபூர் வென்றிருக்கிறார். கலையுலகத்துக்கு அவரின் அளப்பரிய பங்கினைப் பாராட்டி கௌரவ விருதாக அவருக்கு இது அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ‘டெல்லி கிரைம் 2’ விற்காக நடிகை ஷெஃபாலி ஷா மற்றும் ‘ராக்கெட் பாய்ஸ் 2’ நடிகர் ஜிம் சரப் ஆகியோரும் சர்வதேச எம்மி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours