Lal Salaam Teaser Fans Reaction And Review Rajinikanth Vishnu Vishal

Estimated read time 1 min read

இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம், லால் சலாம். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

லால் சலாம் திரைப்படம்:

கிரிக்கெட் விளையாட்டையும் அதில் நடக்கும் மதம் சார்ந்த அரசியலையும் வைத்து படமாக்கப்பட்டுள்ளது, லால் சலாம். இதில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் வருகிறார். 2015ஆம் ஆண்டுக்கு பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம் இது. கடந்த ஆகஸ்டு மாதம் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. லால் சலாம் படத்தை லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன் தயாரித்து வழங்குகிறார். இப்படத்தின் டீசர் (Lal Salaam Teaser) தீபாவளி தினமான இன்று வெளியாகியுள்ளது. 

லால் சலாம் படத்தின் டீசர்..

லால் சலாம் படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் வியூஸ்களை கடந்தது. 

லால் சலாம் படத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விமர்சனத்தை கொடுத்துள்ளனர். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம். 

மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“பவரா இருக்கு..”

ஒரு ரசிகர், லால் சலாம் படத்தின் டீசர் மிகவும் பவர்ஃபுல்லாக உள்ளதாக விமர்சனம் கொடுத்துள்ளார். 

rajini

இந்த பொங்கலுக்கு டபுள் செலிப்ரேஷன் எனவும் அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார். 

ரஜினிக்கு பாராட்டு..!

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் மட்டுமே வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், டீசரில் அவர் வரும் ஒரு சில காட்சிகளை கூட ரசிகர்கள் பெருமையுடன் டிவிட்டர் எக்ஸ் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

Rajini

ஒரு ரசிகர், ரஜினிகாந்த் மட்டுமல்லாது அனைவரையும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். நடிகர் செந்திலும் ரஜினிகாந்தும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக லால் சலாம் படத்தில் நடிக்கின்றனர். இது குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இஸ்லாமியர்களை கொண்டாடும் ரஜினி..

தமிழ் சினிமா மட்டுமன்றி, இந்திய சினிமா அளவிலேயே தீவிரவாதிகள் என்றால் அவர்களை இஸ்லாமியர்களாக காண்பிப்பர். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதை உடைத்தெறிக்கும் விதமாக ரஜினி தற்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளதாக ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார். 

Rajini

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் வில்லன்களாகவும் காட்டும் நடிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்றுமே இஸ்லாமியர்களை தன் திரைப்படங்களில் கொண்டாட தவறியது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | ஹரிஷ் கல்யாண் to சிவகார்த்திகேயன்-திரை பிரபலங்களின் தீபாவளி க்ளிக்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours