ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ். தமிழில், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 7:
கடந்த மாதம் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் தோன்றிய சில முகங்களும், சில டிஜிட்டல் முகங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக உள்ளனர். இதில் வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்ட சிலர் கடந்த சில வாரங்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர் (Bigg Boss 7 Eviction). அந்த வகையில், இந்த வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த வார எவிக்ஷன்..
பிக்பாஸ் சீசன் 7-ல், வந்த புதிதில் அமைதியாக இருந்த சிலர் சில நாட்களுக்கு பின்னர் பெரிதாக பேசப்பட்டு வந்தனர். அப்படிப்பட்ட போட்டியாளர்களுள் ஒருவர், ஐஷூ (Bigg Boss 7 Aishu). இவர், இதற்கு முன்னர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பாளராக இருந்து அமீரின் உறவினர் என கூறப்படுகிறது. நடன கலைஞராக இருக்கும் இவர், பிக் பாஸ் போட்டிக்குள் நுழைந்த இளம் போட்டியாளர்களுள் இவரும் ஒருவர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஐஷூ, கடந்த சில வாரங்களாகவே தனிப்பட்ட நபராக விளையாடாமல் சக போட்டியாளரான நிக்ஸனுடன் சேர்ந்து கேம் விளையாடி வருவதாக பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் நிலவியது. இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட நபர்களுள், ஐஷூவும் ஒருவர். இவர், நிக்ஸனுடன் நெருக்கமாக பழகியதால், வெளியில் இவருக்கு இருந்து ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து போனது. இந்த வாரம், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இவர்தான் தற்போது வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
வாங்கிய சம்பளம்..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் என்ற பெயரில் இறுதியில் பெரிய தொகை ஒன்று கொடுக்கப்படும். அந்த வகையில் ஐஷூவிற்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஐஷூ, பிக்பாஸ் இல்லத்தில் மொத்தம் 42 நாட்கள் இருந்துள்ளார். ஆகையால், இவருக்கு ஜி.எஸ்.டி பிடித்தம் போக, சுமார் 8 லட்ச ரூபாய் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம்..
பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப், கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் பெரிதாக வெடித்து, கமல்ஹாசனின் பெயரும் சேர்ந்து கெட்டுப்போனது. இந்த வார எபிசோடில் பிரதீப்பை மீண்டும் நிகழ்ச்சிக்குள் அழைப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமளிக்கும் வகையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது, ரசிகர்களின் கோபத்தை இன்னும் எகிற வைத்துள்ளது.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப்பை தொடர்ந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours