தீபாவளி பண்டிகை வந்து விட்டாலே கொண்டாட்டங்களுக்கும் குதூகலத்திற்கும் பஞ்சமே இருக்காது. பல வகையான பலகாரங்கள், புதுப்புது துணிகள், பட்டாசு வெடித்து மகிழ்தல், உறவினர்களை சந்தித்து பரிசுகளை பரிமாறிக்கொள்ளுதல் என எக்கச்சக்க மகிழ்ச்சிக்குரிய விஷயங்கள் நடைபெறும். அப்படி பலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நிகழ்வுகளில் ஒன்று, குடும்பத்துடன் அமர்ந்து புதுப்படங்களை டிவியில் பார்ப்பது. திரையரங்குகளிலும் ஓடிடியிலும் பலமுறை பார்த்த படமாக இருப்பினும் அப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கையில் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கும் பாேது அவ்வளவு மகிழ்ச்சி உண்டாகும். இந்த வருட தீபாவளிக்கும் பல சேனல்களில் புதுப்பது தமிழ் படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
துணிவு:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்திருந்த படம், துணிவு. வங்கியில் நடைபெறும் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், பாவனி, அமீர், தர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். கடந்த பொங்கல் தினத்தன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது. பின்னர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியானது. துணிவு படத்தை தீபாவளி தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் மதியம் 1:30 மணிக்கும் மாலை 6:00 மணிக்கும் பார்க்கலாம்.
வாரிசு:
இந்த வருடம் வெளியாகி வசூல் மழை குவித்த படங்களுள் ஒன்று, வாரிசு. விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடபள்ளி இயக்கியிருந்தார். ராஷ்மிகா மந்தான விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம், தீபாவளியான நாளை சன் தொலைக்காட்சியில் மதியம் 2 மணியளவில் ஒளிபரப்பாகிறது. இதைப்பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
ஜெயிலர்:
ரஜினி நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி பட்டைய கிளப்பிய படம், ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இவர்கள் மட்டுமன்றி ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் வந்தனர். இப்படம் முதன்முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கின்றனர். ஜெயிலர் படத்தை நாளை மாலை 6 மணிக்கு டிவியில் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | Japan Review: கார்த்தியின் ஜப்பான் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
மார்க் ஆண்டனி:
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்ற படம், மார்க் ஆண்டனி. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். படத்தில் சில்க் ஸ்மிதா போன்ற தோற்றமுடைய ஒருவரை நடிக்க வைத்திருந்தனர். இதுவும் படம் பெரிய அளவில் ஹிட் ஆக முக்கிய காரணமாக இருந்தது. மார்க் ஆண்டனி படத்தில் இடம் பெற்றிருந்த ரெட்ரோ பாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்றன. இந்த படம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை காலை 11 மணியளவில் ஒளிபரப்பாக உள்ளது.
போர் தொழில்:
சமீபத்தில் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களிலேயே மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்த படமாக இருந்தது, போர் தொழில். இதில், அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார். சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற இந்த படம், விஜய் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. போர் தொழில் படத்தை நாளை மதியம் 3 மணியளவில் டிவியில் பார்க்கலாம்.
பிச்சைக்காரன் 2:
விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும் இயக்குநராகவும் பணியாற்றிய படம் பிச்சைக்காரன் 2. காவ்யா தப்பர், ஷிவாங்கி வர்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தனர். பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் தொலைக்காட்சியில் முன்பகல் 11:30 மணிக்கு காணலாம்.
மேலும் படிக்க | இளையராஜாவாக நடிக்க தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours