பிக் பாஸ் தமிழ் சீசன் 7 பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து அவரை போட்டியில் தொடர விடாமல் வீட்டை விட்டு வெளியேற்றியதற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து சமூகவலைதள பக்கங்களில் பிரதீப்பிற்கு ஆதரவாக கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. வீட்டிலிருந்து வெளியே வந்த பிரதீப் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் `தீர விசாரிப்பதே மெய்!” என்கிற ஹேஷ்டேக்குடன் சூசகமாகப் பதிவிட்டிருந்தார். அவரை விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக கமல்ஹாசன் வீட்டிலிருந்து அவரை வெளியில் அனுப்பிவிட்டார் என கமல்ஹாசன் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் பிரதீப் அவருடைய ட்விட்டர் பக்கத்தில்,
`ரொம்ப ஷார்ப் ஆன புள்ளைங்களால தான் அது முடியும்!’ என்கிற கேப்ஷனுடன், பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனமான என்டிமோல் சைன் ஐடியை டேக் செய்து, `நீங்கள் என்னை உள்ளே அனுப்ப நினைத்தால், எனக்கு எதிராக சதி செய்த இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றுவதற்கு இரண்டு ரெட் கார்டுகள் வேண்டும். அதுமட்டுமல்லாமல் நான் பிக்பாஸ் வீட்டில் ஏழாவது வாரத்தின் கேப்டனாக இருக்க விரும்புகிறேன்!’ என்கிற கண்டிஷனையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

+ There are no comments
Add yours