அசோக் செல்வன் பிறந்தநாளில் கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட பதிவு!
09 நவ, 2023 – 12:09 IST

சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்குமிடையே ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வந்தபோது காதல் ஏற்பட்டு, கடந்த செப்டம்பர் 13ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் நவம்பர் எட்டாம் தேதியான நேற்று அசோக் செல்வன் தனது 34வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன். அதில், ‛நீங்கள் எனக்கு கிடைத்த மிகப் பெரிய விஷயம். உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் நம்மை சுற்றியுள்ள இயற்கையிலும் சிறந்ததாக வெளிப்படுகிறது. உங்களது அன்பான இதயத்துக்கு நன்றி. நீங்கள் எல்லாமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். மிகவும் நேசிக்கிறேன்’ என்று அந்த பதிவில் தெரிவித்து அசோக் செல்வனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன்.
+ There are no comments
Add yours