ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம்! அதிரடி சட்டத்தை பிறப்பித்த மத்திய அரசு!!
08 நவ, 2023 – 13:52 IST
ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி போலி வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது. ஷாரா பட்டேல் என்ற நடிகையின் கவர்ச்சி வீடியோவில் அவரது முகத்தை எடுத்துவிட்டு அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை பொருத்தி அந்த போலி வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா மந்தனா, தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.
இப்படியான நிலையில், இது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு ஒரு அதிரடி சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி போலி வீடியோ குறித்து புகார் அளித்தால் 24 மணி நேரத்துக்குள் அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours