Sandhya Raagam Serial Episode Update Today On 6th November 2023

Estimated read time 1 min read

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

இன்றைய எபிசோடில் மாயா கிஷோரிடம் இங்கே இருக்க வேண்டாம் என சொல்லி பேச கிஷோர் நான் ஆஸ்திரேலியா கிளம்பிடுவேன் நீங்கதான் இருக்கணும் என்று சொல்லி கீழே வந்து ஜானகியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஜானகி மாயா இங்கதான் இருக்கணும், சந்தியாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்து இருக்கேன் இனிமே அவ என்னுடைய பொண்ணு நான் தான் அவளை பார்த்துக்குவேன் என்று சொல்ல கிஷோர் அவளையும் சமாளித்து இந்த குடும்பத்தையும் எப்படி சமாளிக்க போறீங்க என்று கேட்க சமாளித்து தான் ஆக வேண்டும் என ஜானகி சொல்கிறாள். 

இதைக் கேட்ட மாயா ரூமுக்கு வந்து யாருக்கு யார் அம்மா எனக்கு எப்பவும் எங்க அம்மா சந்தியா மட்டும் தான் வேற யாரையும் அம்மாவை ஏத்துக்க முடியாது என்னதான் நடந்தாலும் நான் இங்கு இருக்க போறது கிடையாது. அப்பா ஆஸ்திரேலியா கிளம்பட்டும் நான் அமெரிக்கா கிளம்பி போக போறேன் என முடிவெடுக்கிறாள். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: வந்த ஒரே வாரத்தில் வெளியேறிய அன்னபாரதி! வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Sandhya Raagam

அதைத் தொடர்ந்து வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கிஷோர் ரகுராமுக்கு எதிரே இருக்கும் சார் காலியாக இருப்பதை பார்த்து இது யாராவது உட்கார்ந்து சாப்பிடலாமே என்று கூறுகிறார். இந்த வீட்டில ஆம்பளைங்க சாப்பிடும் போது பொம்பளைங்க உக்காந்து சாப்பிடக்கூடாது அது மாற்றப்படாத விதி என குடும்பத்தில் இருக்கும் ஒருவர் சொல்ல ரமணி அம்மா நீங்க எல்லாம் அப்படித்தான், இது கட்டுப்பாடான குடும்பம் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிய போகுது என பேசுகிறார். 

சரி உங்க பொண்ண கூப்டுங்க உட்கார்ந்து சாப்பிடட்டும், இரண்டு நாள்ல போக போற விருந்தாளி தானே என்று கூறுகிறார்‌. இதை தொடர்ந்து ஜானகி சைகை காட்ட தனலட்சுமி மாயாவை கூப்பிட போக மாயா எனக்கு சாப்பாடு ஒன்னு தேவையில்ல யார் சொன்னாலும் என்னால சாப்பிட வர முடியாது என திட்டி அனுப்ப கிஷோர் மாயா பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறார். 

மேலும் மாயா போக போக பழகிப்பா அவ இனிமேல் இங்கு தானே இருக்க போறாள் என்று சொல்ல வர ஜானகி அவரை தடுத்து நிறுத்தி நாளைக்கு உங்களுக்கு எப்போ பிளைட் என கதையை மாற்றி விடுகிறாள். அதன் பிறகு ரகுராம் நாளைக்கு நாங்க இருக்க மாட்டோம் கோவிலுக்கு போறோம், ரெண்டு பேரும் நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க என்று சொல்லி எழுந்து சென்று விடுகிறார். 

ஒரு பக்கம் மாயா அம்மாவின் போட்டோவை பார்த்து கண்கலங்கி அழுது கொண்டிருக்க இன்னொரு பக்கம் மாயா அங்க தான் இருக்க போறாள் என்ற விஷயத்தை ரகுராமிடம் சொல்லி எப்படி அனுமதி வாங்குவது என பதித்த தவிக்கிறாள் ஜானகி. 

அதைத்தொடர்ந்து ஜானகி ரூமுக்கு வர ரகுராம் பொண்ணு என்ன இப்படி வளர்த்து வச்சிருக்காங்க, நானும் சரி ரெண்டு நாள் இருக்கட்டும் என்று தான் நினைச்சேன் ஆனா அந்த பொண்ணு பேசறது எல்லாம் பார்த்தா நம்ம தினமும் கெட்டுப்போயிடுவா போல அந்த குடும்பத்துக்கு அவ செட் ஆக மாட்டா, ஊருக்கு போறேன்னு சொல்றவங்கள தடுத்து நிறுத்தாத போகட்டும் என ரகுராம் சொல்லி விட ஜானகி செய்வதறியாது தவிக்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்க | மாரிக்கு எதிராக தாரா போட்ட பிளான்‌! மாரி சீரியல் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours