இதில் ‘கேப்டன் மார்வெல்’ கரோல் டான்வர்ஸ், ‘மிஸ் மார்வெல்’ கமலா கான் மற்றும் மோனிகா ராம்பியூ ஆகிய மூன்று பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன. நியா டகோஸ்டா இயக்கியுள்ள இப்படத்தில் ப்ரி லார்சன், டியோனா பாரிஸ், சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே அஸ்டன், இமான் வெல்லானி, சியோ-ஜுன் பார்க் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை சமந்தாவிடம், “மார்வெல்லில் எந்தெந்த இந்திய நடிகர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும்?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா மற்றும் அலியா பட் ஆகியோர் இணைந்து நடித்தால் நல்லா இருக்கும்” என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதவிர, விஜய்க்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, சமந்தா, அசின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் சிறந்த ஜோடி, யார் என்ற ட்வீட்களும் ரசிகர்கள் மத்தியில் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours