இந்நிலையில் சமூக வலைதளங்களில் ‘பிரதீப் பிக்பாஸில் விளையாடிய விதம் தவறு, இருப்பினும் உண்மையில் அவர் நல்ல மனிதர்’ என்று அவரது நண்பர்களும், ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரதீப்பின் நண்பரான நடிகர் கவின், ‘ உன்னைப் பற்றி தெரிந்த மக்களுக்கு எப்போதும் நீ யாரென்பது தெரியும்” என்று இருவரும் ஒன்றாக சபரிமலை செல்லும்போது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து பிரதீப்பிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நடிகரும், டான்ஸருமான சதிஷ் கிருஷ்ணன், ‘பிரதீப்பிற்கு வாழ்த்துக்கள், அற்புதமான வெற்றிப்பயணம் அவருக்காகக் காத்திருக்கிறது. நிறைய பெரிய விஷங்கள் (Big) உனக்காகக் காத்திருக்கு பாஸ் (Boss)’ என்று பதிவுட்டுள்ளார்.
பிரதீப்பிற்கு ரெட்காட்டு கொடுக்கப்பட்டது குறித்த உங்கள் கமென்ட்டைப் பதிவிடவும்.
+ There are no comments
Add yours