ஏடிஎம் வேன் கொள்ளை பின்னணியில் உருவான ரூல் நம்பர் 4

Estimated read time 1 min read

ஏடிஎம் வேன் கொள்ளை பின்னணியில் உருவான ‘ரூல் நம்பர் 4’

31 அக், 2023 – 13:54 IST

எழுத்தின் அளவு:


Rule-No.-4-originated-in-the-background-of-ATM-van-robbery

ஏடிஎம் மையங்களுக்கு பணத்தை கொண்டு செல்லும் வேன்களை வழிமறித்து பல இடங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படியான ஒரு சம்பவத்தின் பின்னணியில் உருவாகி உள்ள படம் ‘ரூல் நம்பர் 4’. பாஸர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா கதாநாயகியாக நடிக்கிறார். மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ், கலா பிரதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கெவின் டெகாஸ்டா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்ய, தீரஜ் சுகுமாறன் பின்னணி இசையமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் பாஸர் கூறும்போது “ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற கதாநாயகன் தமிழுக்கு, ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல். ஒருநாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒரு தரப்பினர் திட்டமிடுகிறார்கள். இதற்காக காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள். அப்படியான சூழ்நிலையில் கதாநாயகன் எப்படி செயல்படுகிறான், அதற்கான பலன் என்ன என்பதுதான் படம். வருகிற 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours