Ilaiyaraaja Biopic With Dhanush: தமிழில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டு கேப்டன் மில்லர் படம் வெளியாக உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரியங்கா மோகன் மற்றும் சிவராஜ்குமார் நடித்துள்ள இந்த படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படமாக உள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். தற்போது கோலிவுட்டில் வெளியாகி உள்ள பரபரப்பான செய்தி என்னவென்றால், தனுஷ் விரைவில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார் என்பது தான். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் மற்றும் படம் 2025ல் வெளியாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கனெக்ட் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இயக்குனர் யார் என்பது தற்போது வெளியாகவில்லை.
மேலும் படிக்க | ரஜினி – லோகேஷ் படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன மனோஜ் பரமஹம்சா!
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது திரை வாழ்க்கையில் 1000 திரைப்படங்களுக்கு மேல், 7000 பாடல்களை இசையமைத்துள்ளார் மேஸ்ட்ரோ இளையராஜா. மேலும் பத்ம பூஷன், மற்றும் பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகாடமிக் விருது என பல விருதுகளை வென்றுள்ள இளையராஜா தற்போது எம்பி ஆகவும் உள்ளார். இளையராஜா தனது பாடல்கள் மூலம் பல ஹீரோக்களை வெற்றி பெற வைத்துள்ளார். 50 ஆண்டுகளில் 20,000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளை முடித்த ஒரே இசைக்கலைஞர் இளையராஜா. முக்கியமாக தற்போது இருக்கும் ரஜினி, கமல் என இருவருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் உள்ள பல ஹீரோக்களின் படங்கள் இளையராஜா இசையால் வெற்றி பெற்றுள்ளது. முன்பு இளையராஜா பயோபிக்கில் நடிக்க ரஜினியிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.
தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனுஷின் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். இளையராஜா மீது தனுஷ்க்கு எப்போதும் அளவுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இந்த படத்தை இயக்க வெற்றிமாறனிடம் பேசியுள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. அவரும் இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இருவருக்குமே கைவசம் நிறைய படங்கள் உள்ளது. வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு பிசியாக உள்ளது. இதன் பிறகு பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் வெற்றிமாறன் – சூர்யா இணையும் வாடிவாசல் படத்தில் இணைய உள்ளார். அதன் பிறகு தெலுங்கில் ஒரு படம், விஜய்யுடன் ஒரு படம் என்று அடுத்தடுத்து கைவசம் படம் வைத்துள்ளார். இதுதவிர பான் இந்தியா ஸ்டாராக உள்ள தனுஷ் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். D50, D51, இந்தி படம் என்று தொடர்ந்து ஐவரும் பிசியாக உள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத இந்த செய்தி வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். முக்கியமான தனுஷை இளையராஜா கெட்டப்பில் பார்க்க ஆவலுடன் உள்ளனர். முன்னதாக ஷமிதாப் படத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றிய பாலிவுட் திரைப்பட இயக்குனர் ஆர்.பால்கி, சமீபத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷை நடிக்க வைக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார். பால்கி கடந்த காலத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சமீபத்தில் பால்கி அளித்த பேட்டியில், “இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தனுஷை வைத்து உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு. தனுஷ் பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்” என்று கூறி இருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours