பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல், முதன் முறையாக டபுள் எவிக்ஷன் நிகழ்ந்து யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி வெளியேற்றப் பட, புதிதாக ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.
வைல்டு கார்டு என்ட்ரியில் அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி ஆகிய நான்கு பேரின் என்ட்ரி முன்கூட்டியே வெளியில் கசிந்து விட்ட நிலையில், ரேடியோ ஜாக்கி பிராவோ குறித்த தகவல் மட்டும் அவ்வளவாகத் தெரியவில்லை. பிராவோ யார்? எப்படி யார் மூலம் பிக் பாஸுக்குள் நுழைந்தார்? விசாரித்தோம். ‘சொந்த ஊர் வால்பாறை. இவருடைய முழுப் பெயர் பிராவோ அருண்.
இவருடைய அப்பா அரசியல் கட்சி ஒன்றில் பொறுப்பில் இருந்திருக்கிறார். அக்கா கோயம்புத்தூரில் வசித்ததால் அங்கு தங்கி கல்லுாரியில் படித்திருக்கிறார். படிப்பு முடிஞ்சதும் கொஞ்ச நாள் கோயம்புத்தூரில் கிடைத்த வேலைகளைச் செய்திருக்கிறார். ஃபுட் டெலிவரி பாயாகக் கூட வேலை செய்த அனுபவம் இவருக்கு உண்டு.
பிறகு மீடியாவில் ஆங்கரிங் வாய்ப்புகள் வர அதைச் செய்யத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மீடியா சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு சென்னைதான் சரியெனத் தோன்ற சென்னைக்கு வந்துவிட்டார்.
சென்னையில் ரியோ ராஜ் உள்ளிட்ட சிலர் இவருக்கு நெருங்கிய நண்பர்களாக, அவர்களுடைய தொடர்பு மூலம் சன் மியூசிக் சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அவருடைய முதல் முழுநேர மீடியா வேலை எனச் சொல்லலாம். ரியோ ராஜும் இவரும் ரூம் மேட்ஸாக இருந்தவர்கள்.
தொடர்ந்து மாடலிங், ஷார்ட் ஃபிலிம், சினிமா எனத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியவரைத் திடீரென அழைத்தது துபாய். அங்கு பண்பலை ரேடியோவில் ஜாக்கியாகச் சேர்ந்தார். துபாய் சென்றபிறகும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை ஒவ்வொரு சீசனிலுமே மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், துபாய்னு வெளிநாடுகளில் வசிக்கிற தமிழ்ப் பிரபலங்களுக்கு வாய்ப்பு தருவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனுக்கு பிராவோவும் வந்திருக்கிறார்” என்கிறார்கள் பிராவோ, மற்றும் ரியோ ராஜின் நட்பு வட்டத்தினர்.
பிக் பாஸ் வீட்டில் பிராவோ அசத்துவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
+ There are no comments
Add yours