‘பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ல் வைல்டு கார்டு என்ட்ரியில் ஒன்றல்ல இரண்டல்ல, ஐந்து போட்டியாளர்கள் செல்ல இருக்கிறார்கள்’ என கமல் அறிவித்ததிலிருந்தே யார் அந்த ஐந்து பேர் என்ற எதிர்பார்ப்புகள் பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.
இதுகுறித்த செய்தியை விகடன் தளத்திலும் வெளியிட்டிருந்தோம். இதில் சீரியல் நடிகை அர்ச்சனா, பாடகர் கானா பாலா, ஆர்.ஜே பிராவோ என மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவர்களில் சீரியல் நடிகை அர்ச்சனா முதல் நாளே செல்வது போலத்தான் முதலில் திட்டமிட்டு புரொஃபைல் ஷூட்டிங்கெல்லாம் முடிவைடைந்ததாம். ஆனால், என்ன காரணமோ இவர் முதல் நாள் செல்லவில்லை.
இதுதவிர மதுரை முத்துவின் பட்டிமன்றக் குழுவில் பேசி வரும் பேச்சாளர் அன்ன பாரதி பிக்பாஸ் வீட்டிகுச் செல்லவிருக்கிறார். அன்னபாரதியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. மேடைப் பேச்சு, பட்டிமன்றம் என அசத்தி வருகிறார். இவரது பேச்சில் நகைச்சுவை தூக்கலாக இருக்குமென்கிறார்கள் இவரது பேச்சைக் கேட்டவர்கள். சமீபத்தில் தென்மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று இவர் வர்ணனை செய்தது நினைவிருக்கலாம்.
மேலும், ஜீ தமிழ் சேனலில் ‘கார்த்திகை தீபம்’ தொடரிலும் விஜய் டிவியில் ‘ஈரமான ரோஜாவே’, ‘கிழக்கு வாசல்’ என இரண்டு சீரியல்களிலும் நடித்து வந்த நடிகரும், ரச்சிதாவின் கணவருமான தினேஷ் வைல்டு கார்டு என்ட்ரிக் கொடுக்கவுள்ளனர். கடந்த சீசனில் வைல்டு கார்டு மூலம் செல்ல விரும்பி அது நடக்காததால், இந்த சீசனில் கலந்து கொள்ள விரும்பி அதற்கான முயற்சியில் தினேஷ் ஈடுபட்டார் என்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தினர்.
இவர்கள் 5 பேரில் யார் பைனலிஸ்ட் ஆக வாய்ப்பிருக்கிறது என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!
+ There are no comments
Add yours