இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கார்த்தியின் படங்களை இயக்கிய இயக்குநர்கள் சிறுத்தை சிவா, பா.இரஞ்சித், லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கார்த்தி குறித்தும் ‘ஜப்பான்’ திரைப்படம் குறித்தும் பேசினர். இவர்களுடன் நடிகை தமன்னா, சத்யராஜ், சிபி சத்யராஜ், ஆர்யா, விஷால் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். கார்த்தியின் சகோதரரும் நடிகருமான சூர்யாவும் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
ரசிகர்கள் ஆரவாரத்துடன் கோலகலமாக நடைபெறும் இவ்விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குநர் ராஜூ முருகன், ” என் படத்துக்கு பிரசாத் லேப்ல பிரஸ்மீட் வைக்கிறதே பெருசு. ஆனால், இப்ப நேரு ஸ்டேடியம் நிகழ்ச்சி வச்சிருக்காங்க. எல்லாம் கார்த்தி சாரினால்தான் சாத்தியப்பட்டது. கார்த்தி சார் படிக்கிறார். அது அவரிடம் பிடித்தது. வட்டியும் முதலும் தொடரில் இப்படி ஒரு வசனம் வரும் அதை சேர்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார். இது போன்று இலக்கியத்தை சினிமாவுடன் இணைக்கும் விதம் அவரிடம் ஈர்த்தது. பருத்திவீரனுக்குப் பிறகு அந்தளவுக்கு நல்ல பெயரை கார்த்திக்கு எடுத்துக் கொடுக்கக்கூடிய கதாபாத்திரமாகக் கார்த்திக்கு இந்த ‘ஜப்பான்’ கதாபாத்திரம் இருக்கும்.
+ There are no comments
Add yours