பாலிவுட்டின் ஸ்வீட் தம்பதி ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சமீபத்தில் `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் நடிகர் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே கலந்து கொண்டனர். இதில் ரன்வீர் சிங் பேசுகையில், தனக்கும் தீபிகாவிற்கு இடையில் ஏற்பட்ட காதல், திருமணம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து நினைவு கூர்ந்தார். `நான் தீபிகா படுகோனேயுடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்த ஆறு மாதத்தில் அவள்தான் எனக்கானவள் என்பதைத் தெரிந்து கொண்டேன். ராம் லீலா படம் வெளியாகி இருந்தபோது நாங்கள் (தீபிகாவுடன்) டேட் செய்யத் தொடங்கினோம்.
ஒரு கட்டத்தில் அவள்தான் (தீபிகா) எனக்குச் சரியானவள் என முடிவு செய்தேன். ஒரு மோதிரம் வாங்கிக்கொடுக்க முடிவு செய்தேன். என் அம்மா, சகோதரியுடன் சென்று ஒரு மோதிரம் வாங்கினேன். விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்று கொண்டிருந்தோம். அங்கு விடுமுறையில் சென்றிருக்கும்போது அங்கு வைத்து எனது விருப்பத்தை தெரிவிக்கலாமென முடிவு செய்தேன். மோதிரத்தை கையில் எடுத்துக்கொண்டேன். என் நண்பர்கள், `இது குறித்து அவரின் (தீபிகாவின்) பெற்றோரிடம் கேட்டாயா?’ என்று என்னிடம் கேட்டனர்.
அப்போது அவரின் பெற்றோரிடம் கேட்கும் முதிர்ச்சி எனக்கில்லை. நாங்கள் மாலத்தீவு சென்றபோது ரகசியமாக மோதிரத்தையும் எடுத்துச்சென்றேன். ஒரு படகில் நாங்கள் நடுக்கடலுக்குச் சென்றோம். கடலின் நடுவே சிறிய தீவின் மணற்பரப்பில் நின்றோம். எனவே விருப்பத்தைத் தெரிவிக்க இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன். அங்கு நாங்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தோம். மோதிரத்தைக் கொடுத்து அவரிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தேன். உடனே தீபிகா படுகோனே மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். அவர் அதற்கு சம்மதம் தெரிவித்தார்
அந்நேரம் நான் உலகின் மன்னனைப்போல் உணர்ந்தேன். உடனே நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம்” என்று குறிப்பிட்டார். மாலத்தீவில் விடுமுறையை முடித்துக்கொண்டு பெங்களூரு சென்று தீபிகாவின் பெற்றோரிடம் தெரிவித்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக தீபிகாவின் தாயார் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து தீபிகா படுகோனே கூறுகையில், `என்னிடம் புரபோஸ் செய்தவுடன் நான் ஒப்புதல் சொல்லிவிட்டேன். நாங்கள் பெங்களூரு வீட்டிற்கு சென்றபோது, என் தாயார் ரன்வீர் சிங்கைப் பார்த்து யார் இந்த பையன் என்று கேட்டார்.
நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதைப்பற்றி சொன்னேன். ஆனால் தாயார் சம்மதிக்கவில்லை. அதன் பிறகு எனது தாயாரை சம்மதிக்க வைக்க நிறைய வேலைகள் செய்யவேண்டியிருந்தது. அவை அனைத்தும் இப்போது நடந்தது போல் இருக்கிறது” என்றார். ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே திருமண புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours