கமல்ஹாசன் – மணிரத்னம் படப் பணிகள்: புது வீடியோ வெளியீடு | kamal haasan mani ratnam movie kh234 begin start today

Estimated read time 1 min read

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் பெயரிடப்படாத ‘KH234’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. அதேநாளில் கமல்ஹாசன் – மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘‘KH234’ படத்தின் ப்ரொமோ வீடியோவும் வெளியாக உள்ளது. இதற்கான வீடியோ சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக படக்குழு “Begin the Begin” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 1987-ம் ஆண்டில் வெளியான ‘நாயகன்’ படத்தின் காட்சி ஒன்று காட்டப்படுகிறது. பின்பு 2023 என குறிப்பிட்டு கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீகர் பிரசாத், ரவி கே சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்கின்றனர். இறுதியில் எல்லோர் கையிலும் பூங்கொத்துடன் நின்றுகொண்டிருக்க வீடியோ நிறைவடைகிறது. இதன்மூலம் படப் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிவிப்பு வீடியோ:

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours