ஓல்டு இஸ் கோல்டு கிளைமாக்ஸ் – அந்த 7 நாட்கள், 42 ஆண்டுகள் நிறைவு – Old is Gold Climax

Estimated read time 1 min read

‘ஓல்டு இஸ் கோல்டு’ கிளைமாக்ஸ் – ‘அந்த 7 நாட்கள்’, 42 ஆண்டுகள் நிறைவு

26 அக், 2023 – 12:31 IST

எழுத்தின் அளவு:


Old-is-Gold-Climax---Those-7-Days,-42-years-complete

தமிழ் சினிமாவில் பல குடும்பக் கதைகள் வெளிவந்த ஆண்டுகளாக 80களைச் சொல்லலாம். அப்போது கமர்ஷியல் ஹீரோக்களாக வளர்ந்து வந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோரது ஆக்ஷன் படங்களில் கூட அம்மா சென்டிமென்ட், தங்கை சென்டிமென்ட் ஆகியவை படத்தில் கண்டிப்பாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் இதுவரையில் வந்த ஆயிரக்கணக்கான படங்களில் ஒரு சில படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகள்தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் பேசப்படும். அப்படி ஒரு படமாக இதே நாளில் 1981ம் ஆண்டு வெளிவந்த ‘அந்த 7 நாட்கள்’ படம் இருக்கிறது. பாக்யராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க அம்பிகா கதாநாயகியாக நடிக்க எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்த படம்.

பாக்யராஜ், அம்பிகா இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், திடீரென ராஜேஷுக்கு அம்பிகாவைத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மனைவியின் காதலை அறிந்த ராஜேஷ், அம்பிகாவை பாக்யராஜுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்வார். அம்பிகா தாலியை கழட்டிவிட்டு வந்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்பார் பாக்யராஜ். அதற்கு அம்பிகா மறுப்பார். அப்போது பாக்யராஜ், “மிஸ்டர் ஆனந்தன், இதான் நம்மோட பண்பாடு, இதான் நம்மோட கலாச்சாரம், இதான் நம்ம மண்ணோட மகிமை. சட்டத்தில் எல்லாத்துக்கும் இடமுண்டு. ஆனால், சம்முடைய சம்பிராதாயத்தை மாத்தறதுக்கு மட்டும் இடமில்ல. என் காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம். ஆனால், உங்களுடைய மனைவி எனக்குக் காதலியாக முடியாது. இது கொஞ்சம் ஓல்டு கிளைமாக்ஸ்தான், பட் கோல்டு, குட்பை மிஸ்டர் அன்ட் மிசஸ் ஆனந்தன்,” என வசனம் பேசிவிட்டுச் செல்வார்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ ‘தாலி சென்டிமென்ட்’ படங்கள் வந்திருக்கும். ஆனால், “இந்த ஓல்டு இஸ் கோல்டு” படமான ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் தாலி சென்டிமென்ட்டை மிஞ்ச எந்தப் படமும் வந்ததில்லை.

இன்று அக்டோபர் 26ம் தேதியில், அதே 1981ம் வருடம் வெளிவந்து சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்ற பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’ படமும் வெளிவந்தது. ரஜினிகாந்த் நடித்த ‘ராணுவ வீரன்’ படமும் வெளிவந்தது. ஆனால், அந்தப் படங்களை விடவும் ‘அந்த 7 நாட்கள்’ படம்தான் இன்று வரை பேசப்படும் படமாக இருக்கிறது.

இன்றைய தினத்தில் இதற்கு முன்பு வெளியான சில முக்கிய படங்களில் 2000ம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’, 2011ல் சூர்யா நடித்த ‘7ஆம் அறிவு’, விஜய் நடித்த ‘வேலாயுதம்’, ஆகியவை குறிப்பிட வேண்டிய படங்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours