லியோ வசூல் – தென்னிந்தியா ஸ்டார் ஆன விஜய்
26 அக், 2023 – 11:04 IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘லியோ’. இப்படத்தின் முதல் நாள் வசூல் 148 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ள நிலையில் அதன்பின் எந்த வசூல் அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.
இதனிடையே, ஒரு வாரத்தில் இப்படம் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதே சமயம் நேற்று பல ஊர்களில் பகல் காட்சிகள் கூட்டம் வராத காரணத்தால் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் படம் என்றாலே தமிழகத்தைத் தவிர கேரளாவில்தான் அதிக வசூலைப் பெறும் ஆனால், இப்போது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் இப்படம் அதிக வசூலைக் கொடுத்துள்ளது. கேரளாவில் 45 கோடி, கர்நாடகாவில் 31 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 38 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அவற்றின் மூலம் மட்டுமே 114 கோடி வசூலைக் குவித்துள்ளது.
இதன் மூலம் தென்னிந்திய அளவில் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார் விஜய். அவருடைய கடந்த சில படங்கள்தான் தெலுங்கில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகிறது. தற்போது ‘லியோ’ மூலம் அதிக வசூல் கிடைத்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் ‘லியோ’ படம் லாபக் கணக்கை ஆரம்பித்து வைத்து விட்டது.
+ There are no comments
Add yours