Thalapathy 68: `விஜய் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி பட நடிகை’; யார் இந்த மீனாக்ஷி சௌத்ரி? |about actress Meenakshi Chaudhary

Estimated read time 1 min read

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  ‘புதிய கீதை’ படத்திற்கு பிறகு, விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின்  பூஜை வீடியோ வெளியானது.  இந்த வீடியோவில் யார் யாரெல்லாம் படத்தில் நடிக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, மீனாக்ஷி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். தவிர, வெங்கட் பிரபு படத்தில் வரும் ஆஸ்தான நடிகர்களான வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் இருக்கிறார்கள்.

மீனாக்‌ஷி செளத்ரி

மீனாக்‌ஷி செளத்ரி

இதில் நடிகை மீனாக்ஷி சௌத்ரி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் பலரும் யார் இந்த மீனாக்ஷி சௌத்ரி என்று சமூக வலைதளங்களில்  தேடி வருகின்றனர். விஜய்யின் 68 வது  படத்தில் நடிக்கும் மீனாக்ஷி சௌத்ரி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையான இவர் 2018 ம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் பட்டத்தை வென்றிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours