‘கோ’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமான நாயகி கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
ஜீவா கார்த்திகா நடித்த கோ படமும், அப்படத்தின் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றது. கார்த்திகா இதுவரை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில் ஒன்று மகரமஞ்சு என்ற மலையாளப் படம். மகரமஞ்சு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படமாக இருந்தது. நடிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கும் கார்த்திகா திருமணம் செய்யப் போவதாக பல செய்திகள் முன்னரே வெளியாகின.
நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்த கார்த்திகா:
முன்னதாக, கார்த்திகா தனது சமூக வலைத்தளத்தில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதன் மூலம், நிச்சயதார்த்தம் குறித்து தனது ரசிகர்களுக்குத் தெரிவித்தார். ஆனால் மணமகன் முகத்தையோ மற்ற தகவல்களையோ கார்த்திகா தெரிவிக்கவில்லை.
ராதா பகிர்ந்த புகைப்படங்கள்:
நடிகை ராதா தனது மகளின் நிச்சயதார்த்த விழாவின் போது எடுத்த பல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதனுடன் சேர்த்து, ஒரு அழகான குறிப்பை பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களாக மகளின் திருமணக் கனவில் இருக்கும் தாயின் அத்தனை மகிழ்ச்சியையும் குறிப்பிலிருந்தே புரிந்து கொள்ளலாம். “எங்கள் மகளை விரைவில் மற்றொரு புதிய குடும்பத்திற்குக் அனுப்புவதில் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதை என்னால் வார்த்தைகளில் கூற முடியவில்லை..” என்று கூறியுள்ளார்.
மேலும், “கடவுள் உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமணத்தை ஆசீர்வதிப்பாராக. இந்த அழகான குடும்பத்தை உங்களுக்காக தேர்ந்தெடுத்ததற்கு என்னை நான் அதிர்ஷ்டசாலி என்று சொல்ல முடியாது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்களின் சங்கமம். இப்போது என் மனதில் நிறைய கலவையான உணர்வுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இறைவன் to சந்திரமுகி 2-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புதுப்புது படங்கள்..!
தொடர்ந்து, “எல்லாவற்றிலும் மிகவும் முக்கியம், உங்கள் அன்பும் மகிழ்ச்சியும்தான். எந்த தாயும் விரும்பும் சிறந்த மகள் கார்த்து நீ. இரு குடும்பங்களுக்கும் சிறந்த பரிசு. நீங்கள் எனக்கு அளித்த இந்த அற்புதமான அனுபவங்களுக்கு நன்றி” என்று ராதா இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார். ஆனால் ராதா பகிர்ந்த பதிவில் மாப்பிள்ளையின் முகமோ, தகவலோ எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிகழ்வு இருவீட்டார் உட்பட சில நெருங்கிய திரைப் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இவர்தான் மாப்பிள்ளையா?
நடிகை கார்த்திகாவின் வருங்கால கணவர் யார் என்ற தகவலை அவரே சில நாட்களுக்குள்ளாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, அந்த நபர் கார்த்திகாவின் நீண்ட நாள் நண்பராக இருக்கலாம் என்றும் இவர்கள் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருவதாகவும் சில தகவல்கள் சினிமா வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
திரையுலகை விட்டு விலகிய கார்த்திகா:
நடிகை கார்த்திகா படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே மும்பையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் தொழில்முறை பட்டப்படிப்பை படித்தார். தமிழ் மற்றும மலையாள மாெழியில் கார்த்திகா ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 10வருடங்களாகவே எந்த படங்களிலும் நடிக்காமல் இருக்கும் இவர், அவரது தந்தையின் தொழில்களை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. கார்த்திகா, சினிமாவில்தான் ஆக்டிவாக இல்லையே தவிர தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். வெளி நாடுகளுக்கு விடுமுறை செல்வது, அவ்வப்போது குடும்பத்தினருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வது என்று அடிக்கடி ஏதேனும் சில புகைப்படங்களை வெளியிடுவார்.
மேலும் படிக்க | லியோவில் விஜய்யுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? ‘இந்த’ நடிகரின் மகள்தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours