Nayanthara New Sanitary Pad Business FEMI9 | அடுத்த பிசினஸ்.. புதிய நாப்கின் தொழிலை ஆரம்பித்த நயன்தாரா

Estimated read time 1 min read

விஜயதசமி நாளில் FEMI9 எனும் புதிய தொழிலை தொடங்கிய நயன்தாரா: நடிகை நயன்தாரா தற்போது பெண்களுக்காக புதிய பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா:
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், நயன்தாரா. இவர், தமிழில் ‘ஐயா’ படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்திலேயே, அப்போது முன்னணி நடிகராக இருந்த சரத்குமாருடன் ஜோடி சேர்ந்தார். இதையடுத்து அவர் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து சூர்யா, விஜய், அஜித் குமார் என தொடங்கி அடுத்த 10 வருடங்களில் வளர்ந்த ஹீரோக்களாக மாறிய ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என அனைவருடனும் சேர்ந்து ஜோடியாக நடித்து விட்டார். சமீபத்தில் பாலிவுட் வரை சென்று ஷாருக்கானுடனும் டூயட் பாடி விட்டார். தற்போது கமலின் 234வது படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 7ல் இத்தனை காதல் புறாக்களா? மணி-ரவீனா, பூர்ணிமா-விக்ரம்..லிஸ்ட் பெரிசு!

நயன்தாராவின் 9ஸ்கின் புரோடக்ட்:
9ஸ்கின் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் தொழிலதிபர் டெய்சி மோர்கன் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட சருமப் பராமரிப்பு பிராண்டாகும். 9 ஸ்கின் பெண்களின் அழகு மற்றும் சுய பராமரிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பிரீமியம் ஸ்கின் புரோடக்ட்ஸ்களை வழங்குகிறது. மேலும் இந்த புரோடக்ட் இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கிடைக்கும். 9ஸ்கின் பிராண்டில் இரண்டு வகையான சீரம், இரண்டு வகையான கிரீம் மற்றும் ஒரு எண்ணெய் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆரம்ப விலை ரூ.999ஆக உள்ளது, அதிகபட்சம் ரூ.1,899ஆக உள்ளது. 

 

புதிய தொழிலை பெண்களுக்காக துவங்கிய நயன்தாரா:
இந்நிலையில் தற்போது 9ஸ்கின் தவிர நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றொரு புதிய பிஸ்னஸில் கால் பதித்துள்ளர். Femi9 என்கிற நாப்கின் தயாரிக்கும் நிறுவனந்தை தான் துவங்கியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன் தெரிவித்துள்ளதாவது, “பெருமிதம் கொள்கிறேன்!! இந்த விஜயதசமி திருநாளில் FEMI9 எனும் புதிய பயணத்தை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன். தனிமனித சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த Femi9 ஒரு பிராண்ட் மட்டுமல்ல; இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியைக் கொண்டாட என்னுடன் இணையுங்கள்! ஒருவரையொருவர் ஆதரிப்போம், இணைந்து உயர்வோம் என்று பதிவிட்டுள்ளார். தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இந்த புதிய முயற்சிக்கு பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.

 

பல நிறுவனங்களில் முதலீடு:
இதற்கிடையில் ஏற்கனவே நயன்தாரா பல ரியல் எஸ்டேட் பிசினஸில் பணத்தை முதலீடு செய்துள்ள நிலையில், இவர் ரவுடி பிச்சர்ஸ், சாய் என்கிற ஸ்டேர் நிறுவனம், லிப் பாம் நிறுவனம், 9ஸ்கின் என்கிற அழுகு சாதனா பொருட்கள் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | “மூடிக்கிட்டு இருக்கனும்” சிவகார்த்திகேயன்-டி.இமான் சர்ச்சை-சூடாக பேசிய பிரபலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours