Kamal Haasan: `நாயகன் மீண்டும் வர்றார்!' ரீ-ரிலீஸ் ஆகிறதா 'நாயகன்'?

Estimated read time 1 min read

கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ சில மாதங்களுக்கு முன்னர் ரீ-ரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தயாரிப்பாளர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில் பலருக்கும் கமல் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்து, அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.

தயாரிப்பாளர் தாணுவும், கமலை வைத்து தான் தயாரித்த ‘ஆளவந்தான்’ படத்தை மறுவெளியீடு செய்கிறார். இந்திய சினிமாவின் கல்ட் கிளாஸிக்கான, கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவான ‘நாயகன்’ படமும் இப்போது ரீ-ரிலீஸ் ஆகிறது.

கமல், மணிரத்னம்

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கும் முன்னோடி 1987ல் வெளியான ‘நாயகன்’ படம் தான். மணிரத்னம் – கமல், பி.சி.ஶ்ரீராம் காம்பினேஷனில் மூன்று தேசிய விருதுகளை வென்ற படம். வேலு நாயக்கர் கதாபாத்திரமகாவே கமல் வாழ்ந்திருப்பார். இளையராஜாவின் 400வது படம் என்ற சிறப்பும் நாயகனுக்கு உண்டு.

‘நாயகன்’

இப்படி பல சிறப்புகளைப் பெற்ற ‘நாயகன்’ கமலின் பிறந்தநாள் பரிசாக நவம்பர் முதல் வாரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது. விநியோகஸ்தரான மதுராஜ், இதனை ரீ-ரிலீஸ் செய்கிறார்.

இது பற்றி மதுராஜிடம் பேசினேன் ”’வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ் ஆனதும், பலரும் ‘நாயகன்’ படமும் இதைப் போல டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட வேண்டும் என விரும்பினார்கள். ‘விக்ரம்’ படத்திற்கு பின் கமல் சாரின் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அதனால், ‘நாயகன்’ படத்தை கமல் சாரின் பிறந்த நாள் ஸ்பெஷலாக நவம்பர் 3ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இன்றைய நவீன சூழலுக்கு ஏற்ப இந்தப் படம் துல்லியமாக கலர் கரெக்‌ஷன் செய்யப்பட்டு 7.1, 5.1, டால்பி அட்மாஸ் ஒலி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தில் நாயகன் படம் பார்த்தவர்களுக்கு கூட, இப்போதும் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

மதுராஜ்

அதுமட்டுமல்ல படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்வதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதே சமயம் ‘பில்லா’ படம் ரீமேக் செய்யப்பட்டபோது எப்படி நவீனமாக வெளியானதோ, அதைப் போல ‘நாயக’னும் புதிய வடிவத்தில் ரீமேக் செய்யப்படும். கிட்டத்தட்ட 120 திரையரங்குகளில் நாயகன் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இது போன்று இன்னும் சில படங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் எண்ணமும் இருக்கிறது.” என்கிறார் மதுராஜ்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours