இந்நிலையில், “ஒரு நாளைக்கு 5 காட்சிகள்தான், அதுவும் விடுமுறையான சனி, ஞாயிறு, திங்கள் மட்டுதான், மற்ற நாள்களில் நான்கு காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி. 9 மணி முதல் 1.30 மணி வரை மட்டுமே இந்தக் காட்சிகளைத் திரையிட வேண்டும்” என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ‘லியோ’ தயாரிப்பு நிறுவனம் 7 மணி காட்சிக்காவது அனுமதி வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தது. நேற்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், “அரசு கொண்டு வந்த இந்த விதிமுறைகளை நீதிமன்றம் மாற்ற முடியாது.
‘லியோ’ படத்திற்கு 4 மணிக் காட்சிக்களுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. காலை 9 மணி காட்சிக்குப் பதிலாக 7 மணி காட்சி திரையிடுவது தொடர்பான அனுமதி குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் அரசிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும்” என்று கூறிவிட்டது. இதையடுத்து ‘லியோ’ தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்து 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், “காலை 9 மணி காட்சிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் ஏற்கெனவே முடிந்துவிட்டன என்பதால் 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது” என்று தமிழ்நாடு அரசு உறுதியாகக் கூறியுள்ளது.
இதற்கிடையில் ரெட் ஜெயண்டிற்கு ‘லியோ’ படத்தின் விநியோக உரிமையைத் தராததால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற சர்ச்சைகள் ஒரு புறம் வெடித்த வண்ணமிருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின், “தளபதி விஜய் அண்ணாவின் ‘லியோ’ படத்திற்கு வாழ்த்துகள். லோகேஷின் சிறப்பான இயக்கம், அனிருத்தின் இசை என படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி, ‘லியோ’ படம் லோகேஷ் கனகராஜின் LCU-க்குள் வருமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. ஆனால், லோகேஷ் இதற்கான பதிலைத் தவிர்த்தே வந்தார். தியேட்டரில் சர்ப்ரைஸாக இருக்கும் என்று பேட்டிகளில் தெரிவித்து வந்தார். ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட ட்வீட்டில் #LCU என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் படம் யுனிவர்ஸில்தான் வருகிறது என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
+ There are no comments
Add yours