ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ’ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனு இமானுவேல் நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘ஜப்பான்’ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – யார் இந்த ஜப்பான்? என்ற அறிமுகத்துடன் டீசர் தொடங்குகிறது. ரூ.200 கோடி பணத்தை கொள்ளையடித்தவர், இந்தியாவில் 180 வழக்குகளை கொண்ட 4 மாநில காவல் துறை தேடும் ஒருவர் என கார்த்திக்கு பில்டப் கொடுக்கப்பட கதாபாத்திரத்துக்கான உடல்மொழியில் நடந்து வருகிறார். அவரது ட்ரெஸ்ஸிங் புதுமை. சுனில், விஜய் மில்டன், கே.எஸ்.ரவிக்குமார் நடுவில் வந்து செல்கின்றனர்.
1.24 நிமிடங்கள் ஓடும் டீசரில் 9 முறை ஜப்பான் என்ற வார்த்தை உச்சரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மொத்த டீசரும் கார்த்தியைச் சுற்றியே படம் நகருகிறது என்பதை உறுதிபடுத்துகிறது. கார்த்தியின் தங்க பற்கள், ‘கைதி’யில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மிஷின் துப்பாக்கி சர்ப்ரைஸ். ‘எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா’ என்ற இறுதி வசனம் கவனம் பெறுகிறது. டீசர் வீடியோ:
+ There are no comments
Add yours