கோவா திரைப்பட விழாவில் மம்முட்டி படம்
17 அக், 2023 – 13:42 IST
மம்முட்டி தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘காதல்: தி கோர்’. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடிக்கும் மலையாள படம். இதனை தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கி உள்ளார். சாகு தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மேத்யூஸ் புலிகன் இசை அமைத்துள்ளார். இந்த படம் இன்னும் தியேட்டரில் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்பாக கோவாவில் வருகிற நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்க உள்ள 54வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இந்த படத்தில் ஜோதிகா மம்முட்டியின் மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷியம் பட பாணியில் பேமிலி சஸ்பென்ஸ் திரில்லராக படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துடன் சேர்த்து கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 26 படங்கள் தேர்வாகியுள்ளன. மேலும் 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
+ There are no comments
Add yours