அந்தக் கடுப்புலதான் ஒருகட்டத்துல ‘வர்ற ஆர்ட்டிஸ்டுகளை வச்சு தொடங்கிடலாம், வரலைங்கிறவங்களை விட்டுடுங்க’னு சொல்லிட்டாங்க. பார்ட் 2 வில் நடிக்க மறுத்த ஆர்ட்டிஸ்டுகள் மேல சேனலுக்குமே ரொம்பவே வருத்தம்தான். அவங்கள்ல சிலர் கொஞ்ச நாளைக்காவது சேனல் பக்கம் தலைகாட்ட மாட்டாங்கன்னுதான் தோணுது ” என்கிறார்கள் இவர்கள்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற பெயருக்குப் பதில் ‘பாண்டியன் இல்லம்’ சீரியலின் பெயரைக் கூட மாற்றி விடலாமென ஆரம்பத்தில் யோசித்தார்களாம். ஆனால் சேனலின் ஒரு பிராண்டாக நினைத்ததாலேயே பிறகு பழைய டைட்டிலே இருக்கட்டுமென முடிவு செய்திருக்கிறார்கள்.
பாண்டியன் குடும்பத்தில் இருந்தவர்களில் வெங்கட் விஜய் டிவியில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கிழக்கு வாசல்’ தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசித் தம்பியாக வந்த சரவண விக்ரம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருக்கிறார். ஹேமாவும் அவரது அப்பாவாக நடித்த ரவியும் இரண்டாவது சீசனில் இருக்கிறார்கள்.
ஆக, ஸ்டாலின் மனைவியாக நடித்த சுஜிதா மற்றும் கதிராக நடித்த குமரன் இருவரையும்தான் இரண்டாம் சீசனுக்கு வர மறுத்து முரண்டு பிடித்தவர்களாகக் கை காட்டுகிறார்கள் சீரியல் யூனிட்டுக்கு நெருக்கமானவர்கள்.
இவர்கள் இருவரின் மீதுதான் சேனல் கடும் அதிருப்தியிலிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் இரண்டாவது சீசனில் நடிகர் அஜய் ரத்னம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்டாலின் குடும்பத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் இவரது குடும்பத்துக்கும் இருப்பது போலவே கதை நகருமாம்.
முதல் பார்ட் ஹிட் ஆனது போல் இரண்டாவது சீசனும் ஹிட் அடிக்குமா என்பது சீரியல் ஒளிபரப்பான பிறகே தெரியவரும்.
+ There are no comments
Add yours