“`துருவ நட்சத்திரம்’ படத்தை வைத்து ஒரு யூனிவர்ஸ்…” – கெளதம் வாசுதேவ் மேனன் சொல்லும் சீக்ரெட்ஸ் | “I have created a universe with the film ‘Dhruva Natchathiram’…” – Gautham Vasudev Menon

Estimated read time 1 min read

நடிகர் விக்ரம் நடிக்க வேண்டிய ‘காக்க காக்க’ படம் சூர்யா வசம் வந்தது. அதேபோல, முதலில் சூர்யாவிற்குச் சொன்ன ‘துருவ நட்சத்திரத்தின்’ கதை, பின் சில பிரச்னைகளால் விக்ரம் வசம் வந்துள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் முக்கால்வாசி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. அதனாலோ என்னவோ, 2016ன் கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஓவர் பட்ஜெட், கால் ஷீட் பிரச்னை எனப் பல பிரச்னைகளால் தள்ளிப்போக இப்போது ஒருவழியாக ரிலீஸாக இருக்கிறது. வரும் நவம்பர் 24-ம் தேதி இப்படம் திரைக்காணவுள்ளது.

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கெளதம், ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், லோகேஷின் ‘LCU’ போல ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வைத்து ஒரு யூனிவர்ஸை உருவாக்கும் ஆசை இருப்பதாகவும், அதை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பார்ட் -2 எடுக்கும் திட்டம் இருப்பதாகவும் பேசியுள்ளார். மேலும், சூர்யா ஏன் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று விக்ரம், கெளதமிடம் கேட்டுள்ளார். அதற்கு கெளதம், சூர்யாவிற்கு அடுத்தடுத்து படங்கள் இருந்ததால் கால் ஷீட் பிரச்னை இருந்தது. அதுதான் சூர்யா இப்படத்தை பண்ண முடியாமல் போனதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகத்தை இப்படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் ஸ்டைலான வில்லனாகப் பார்க்கலாம் என்றும் கூறினார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours