இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் முற்றிலுமாக மது மற்றும் மாமிசம் இல்லாமல் வாழ முடிவு செய்துள்ளார். இப்படத்தில் ராவணனாக K.G.F பட நாயகன் யஷ்ஷை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
‘ராமாயணம்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடக்க இருக்கிறது. படம் இரண்டு பாகங்களாகவும் எடுக்கப்பட இருக்கிறது என்கிறார்கள். முதல் பாகத்தில் ராமர் மற்றும் சீதாவை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இப்படத்தில் சீதையாக ரன்பீர் கபூரின் மனைவியும் முன்னணி நடிகையுமான ஆலியா பட்டே நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு ஆலியா பட் அதிலிருந்து விலகிக்கொண்ட பிறகு, சாய் பல்லவி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தற்போது ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ படம் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
+ There are no comments
Add yours