பாண்டியன் ஸ்டோர்ஸ்: “முடிவுக்கு வரும் சீரியல்; விரைவில் சீசன் 2 ஆரம்பமா?!"

Estimated read time 1 min read

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’. பல ஆண்டுகளாக இந்தத் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்தத் தொடருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

இந்தத் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் விஜே சித்ரா. அவரது மறைவுக்குப் பின்னர் அந்தக் கதாபாத்திரத்தில் `பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்துக் கொண்டிருந்த காவ்யா நடித்தார். பிறகு அவரும் சினிமாவில் கவனம் செலுத்த முடிவெடித்ததால் அந்தத் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் நடிகை லாவண்யா நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கதாபாத்திரங்கள் மாறுவது ஒரு புறம் இருந்தாலும் கதையின் போக்கும் விறுவிறுப்பாக இல்லை என பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் தொடர்ந்து கமென்ட் இட்டுக் கொண்டிருந்தனர். தொடரை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இப்படி இழுத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் தொடருக்கென ஓர் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே தொடரை முடிப்பது நலம் என்றும் கூறிவந்தனர்.

தற்போது உண்மையாகவே பாண்டியன் ஸ்டோர்ஸை முடிப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றனர். தொடர் இறுதி அத்தியாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் கடைசி தம்பியாக நடித்துக் கொண்டிருந்த சரவண விக்ரம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலி என ஒட்டுமொத்த டீமும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்திருந்தார்கள். அந்தப் புகைப்படங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்திருந்த நிலையில் அந்தத் தொடர் முடிவடைவது உறுதியாகியிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விரைவிலேயே அந்தத் தொடரின் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாக இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகியுள்ளன. தொடர் முடிவடைவது தொடர்பாக அந்தத் தொடரில் `பிரஷாந்த்’ கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் மகேஷைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

” இதுவரைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல வில்லன்னு யாரும் கிடையாது. அந்த அந்த சூழல் பொறுத்து ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடைய ஒரே ஒரு வில்லன் நான் மட்டும்தான்! இந்தக் கேரக்டர் வரும்போது நெகட்டிவ்னு எனக்குத் தெரியாது. போகப் போகத்தான் கேரக்டர் நெகட்டிவ் ஆக மாறுச்சு. அப்பவும் என் நடிப்புத்திறனை காட்டிக்கிறதுக்கான பிளாட்ஃபார்ம் ஆகத்தான் நான் அதை யூஸ் பண்ண நினைச்சேன். ஐந்து வருஷமா சீரியலில் வில்லனே இல்ல…

பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷ்

நாம ஒரே ஒரு வில்லன் நம்மள எப்படி ஏத்துப்பாங்கன்னுதான் பயந்தேன். வெளியில எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. ஸ்வீட் வில்லனாகத்தான் மக்கள்மனதில் இடம் பிடிச்சிருக்கேன். நல்ல வரவேற்புதான் கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நல்ல ரீச் கிடைச்சிருக்கு. நெகட்டிவ் ரோல் பண்ணினாலும் என் கெரியரில் இந்தக் கேரக்டர் பாசிட்டிவ் ஆக அமைஞ்சிருக்கு! ” என்றதும் சீரியல் முடியப் போகுதுன்னு சொல்றாங்களே? சீசன் 2 எதிர்பார்க்கலாமா? எனக் கேட்டோம்.

“நிச்சயம் எதிர்பார்க்கலாம். கதை முடிவை நோக்கி தான் போயிட்டு இருக்கு. அப்படியே முடிஞ்சாலும் அடுத்த சீசன் வரும்!” என்றதும், `ஒருவேளை சீசன் 2-வில் உங்களை கூப்பிட்டா நடிப்பீங்களா?’னு கேட்கவும், `கூப்பிட்டா கண்டிப்பா நடிப்பேன்!’ என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் -2 வில் நீங்க யாரையெல்லாம் எதிர்பார்க்குறீங்கன்னு மறக்காம கமென்ட் பண்ணுங்க!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours