“அம்மாவை எப்படியோ உயிரோட மீட்டு கொண்டு வந்தோம். நான் இல்லைன்னாலும் என் பிள்ளைங்க யார்கிட்டேயும் கை ஏந்தக் கூடாதுன்னு எங்களை எங்க திறமை மேல நம்பிக்கை வச்சு அதுல டிராவல் பண்ண வச்சாங்க. அம்மா சரியாகி வந்த ஆறு மாசத்துல அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அப்பா தான் வீட்டோட தூண். அவர் செய்துட்டு இருந்த வேலையை இனி செய்யக் கூடாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. எல்லாரும் பொம்பள பிள்ளைங்களை எப்படி படிக்க வச்சு, வளர்க்கப் போறாங்கன்னு சொன்னாங்க. நாங்க புரோகிராம் போயிட்டே ஸ்கூலுக்கும் போயிட்டு இருந்தோம். அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி பத்து நாள் கழிச்சுதான் நாங்க அவரைப் பார்த்தோம். புரோகிராம் போயிட்டு வந்து 50000 ரூபாய் பணத்தை எங்க மாமா அம்மாகிட்ட கொடுத்தாங்க. அந்தப் பணம் தான் அப்ப எங்க குடும்பத்துக்கு உதவியா இருந்துச்சு.
அப்போதிலிருந்துதான் நாங்க பார்த்துக்கிறோம்னு குடும்ப பொறுப்பையும் பார்த்துக்க ஆரம்பிச்சோம். பிள்ளைங்க படிக்கிறதைக் கெடுக்குறீங்க… இதுங்க எப்படி படிக்கப் போகுதுங்கன்னு சொன்னாங்க. பிளஸ் டூல நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் அண்ட் செகண்ட் மார்க் வாங்கினோம். அப்ப தான் கதாநாயகி ஆடிஷன் வந்தது. அந்த சமயம் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி ரெண்டு மாசம் ஆகியிருந்தது. கலந்துகிட்டோம் இதுலேயும் சாதிச்சு எங்க அம்மா, அப்பாவை பெருமைப்படுத்திட்டோம். ரெண்டு பேரும் கண்கலங்கி சந்தோஷப்பட்டாங்க. அவங்க முகத்துல பார்த்த அந்த சந்தோஷமே எங்களுக்குப் போதும். எங்களுடைய வலிகளை எல்லாம் மறக்க வச்சது இந்த வெற்றிதான்! அதனால தான் இந்த வெற்றி எங்களுக்கு பெருசா தெரியுது!” என்றதும் ரூபினா பேசினார்.
“மதத்தை வச்சுப் பேசுறது கஷ்டமா இருந்தது. நடிப்புங்கிறது திறமை சார்ந்த விஷயம். மத ரீதியா எங்களைப் பேசுனது எங்களை ரொம்பவே காயப்படுத்துச்சு. கொஞ்ச நாள் உடைஞ்சு அழுதோம். எல்லாரும் உங்களை எத்தனை பேர் லவ் பண்றாங்க, சப்போர்ட் பண்றாங்க. அதைப் பாருங்கன்னு ஆறுதலா இருந்தாங்க. இப்ப எதுனாலும் பார்த்துக்கலாம் என்கிற தைரியம் எங்களுக்கு வந்திருக்கு!” என்றதும் சீரியல் வாய்ப்பு குறித்துக் கேட்கவும் சிரிக்கின்றனர்.
+ There are no comments
Add yours