சென்னை: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இன்று (அக்.5) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் எத்தனை மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்ற விவரத்தை படக்குழு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.
‘லியோ’ ட்ரெய்லரை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் உள்ள கார் பார்க்கிங்கில் பிரம்மாண்ட ஸ்கிரீன் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தியேட்டர் நிர்வாகம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, அனுமதி தொடர்பாக காவல் ஆணையரை அணுகுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு கொண்டாட்டத்துக்கும் சிக்கல் ஏற்பட்டிருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#LEO CENSORED U/A pic.twitter.com/FtNdFd0AYV
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 4, 2023
+ There are no comments
Add yours