`எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாரிமுத்து இயற்கை எய்தியதையடுத்து பலரும் இந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? எனத் தொடர்ந்து பல சாய்ஸ்களை கமென்ட்டாகச் சொல்லி வந்த நிலையில் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்திய வேல ராமமூர்த்தியே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். `இவருக்கு பதில் இனி இவர்’ என்கிற கேப்ஷனுடன் நேற்றைய எபிசோடில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் என்ட்ரி ஒளிபரப்பானது.
வேல ராமமூர்த்தி எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். சினிமாவில் பிஸியாக நடித்து வந்தவர் இந்தத் தொடரில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் பின்னர் ஒப்புக் கொண்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சின்னத்திரையில் அவர் நடிக்கும் முதல் தொடர் இதுதான்! இந்நிலையில் அவர் நடிப்பு குறித்து பல வித விமர்சனங்கள் சமூகவலைதள பக்கங்களில் பரவி வருகின்றன.
மாரிமுத்துவின் இடத்தில் இன்னொருவரை பொருத்திப் பார்ப்பது கடினம் தான். மாரிமுத்துவின் உடல்மொழியும், கர்ஜனை குரலும் அவருக்கே உரித்தானது. வேலராமமூர்த்தி அவருடைய ஸ்டைலில் வில்லன் கதாபாத்திரமாக நடிக்கும்போது சட்டென பார்ப்பதற்கு வித்தியாசமாகத்தான் தெரியும். மாரிமுத்து மறைவுக்குப் பின்னும் அவர் நடித்திருந்த சில காட்சிகள் ஒளிபரப்பாகின. அப்போது அவருக்கு பின்னணி குரல் வேறொருவர் கொடுத்ததை உடனடியாக அவருடைய ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போகப் போக அந்தக் குரலும் பழகியது.
நேற்றைய எபிசோடில் வேலராமமூர்த்தி நடித்திருந்தது மாரிமுத்துவைப் போல் நிச்சயம் இல்லைதான்! அந்தக் கதாபாத்திரத்திற்கென மாரிமுத்து ஒரு பென்ச் மார்க் செட் செய்துவிட்டார். ஒரே எபிசோடில் அந்த இடத்தை இன்னொருவர் பிடிக்க முடியாது. வேலராமமூர்த்தி அவருடைய ஸ்டைலில் நிச்சயம் அந்தக் கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு அவரால் ஈடுகொடுத்து நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடிப்பார். அதற்கான கால அவகாசம் கொடுத்தே ஆக வேண்டும். அதற்குள்ளாக மாரிமுத்துவுடன் இவரை ஒப்பிட்டு, `இவருக்கு பதில் இவர்னு வேணும்னா போடலாம்.. ஆனா இவர் இந்தக் கதாபாத்திரத்திற்கு செட் ஆகவில்லை!’ என்பது போன்ற பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருவர் போல் இன்னொருவரால் நிச்சயம் பர்ஃபார்ம் செய்ய முடியாது. அவரவருக்கென ஒரு தனித்துவம் உண்டு.
வேலராமமூர்த்தியை மிரட்டலான வில்லனாக சினிமாவில் பார்த்திருக்கிறோம். சின்னத்திரையில் அவருடைய பர்ஃபார்மென்ஸை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் இவரை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
வேலராமமூர்த்தி நடிப்பு குறித்து உங்களுடைய கருத்துகளை மறக்காம கமென்ட் பண்ணுங்க!
+ There are no comments
Add yours