மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபலமான தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கருவாகும். தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷக்தியும் ரங்கநாயகியும் ஒன்று கூட பூஜா அதிர்ச்சி அடைந்தாள்.
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் ரங்கநாயகி சக்தியையும் அனைவரையும் மீனாட்சி வீட்டுக்கு அழைத்துப் போகிறாள். வெற்றி சக்தியின் கழுத்தில் இரண்டாம் தாலி கட்ட வேண்டும் என்று சொல்லி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.
மேலும் படிக்க | லியோ சோலோ ரிலீஸ் இல்லை! இன்னொரு படமும் வெளியாகிறது!
எனக்கும் சக்திக்கும் இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை என்று ரங்கநாயகி சொல்ல, மீனாட்சி சந்தோஷமாகிறாள். இன்றே வெற்றிக்கும் சக்திக்கும் மீனாட்சி வீட்டில் வைத்தே சாந்தி முகூர்த்தம் என்றும் ரங்கநாயகி சொல்ல, அனைவரும் சந்தோஷமாகிறார்கள்.
பூஜா புஷ்பாவிடம், இந்த சாந்தி முகூர்த்தம் நடக்கவே கூடாது என்று சொல்லி, உதவி செய்யச் சொல்லிக் கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | ஐஸ்வர்யா போட்ட புதிய திட்டம் – கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours