டைட்டானிக் போல படமாகும் டைட்டன்.. என்ன பெயர் தெரியுமா? | Do You Know The Name Of Ocean Gate Titan story will be made into a Movie

Estimated read time 1 min read

Ocean Gate Titan: 1912 ஆம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளான டைட்டானிக் கப்பலை காண்பதற்காக ஜூன் 18 2023 அன்று Ocean Gate நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கி வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கனடாவில் உள்ள நியூ பவுண்ட்லாந்து கடற்கரையில் இருந்து புறப்பட்டது. பின்னர் சில மணி நேரத்தில் தாய் கப்பல் உடனான தொடர்பு துண்டிப்பு காரணமாக கப்பல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மேலும் டைட்டன் நீர்மூழ்கியில் 96 மணி நேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டுமே இருந்ததால் கப்பலை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. 

நான்கு நாள் தேடுதலுக்கு பின் டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. விசாரணையில் டைட்டன் நீர்மூழ்கி அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்து சிதறியதாக சொல்லப்பட்டது. இதில் ஓஷன் கேட் நிறுவனத்தின் சிஇஓ ஸ்டாக்டன் ரஷ், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரிட்டன் தொழிலதிபர் ஷாஜிதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத், பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹர்டிங்  மற்றும் ஆய்வாளர் பால் ஹென்றி நார்கோலைட் ஆகிய ஐந்து பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

Ocean Gate Titan

மேலும் படிக்க – டைட்டன் நீர்மூழ்கியின் கடைசி திக் திக் 48 விநாடிகள்! ஆராச்சியாளரின் Shocking Report!

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் டைட்டன் பற்றிய படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜேம்ஸ் கேமரூன் வதந்திகளுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் Mind Riot என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம், இந்த சம்பவத்தை படமாக்க இருப்பதாக தெரிவித்தது. சால்வேஜட் (Salvaged) என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த படத்தை Blackening என்ற படத்தை தயாரித்த பிரயன் டாப்பின்ஸ் இணை தயாரிப்பு செய்கிறார். ஜஸ்டின் மேரிகோர், ஜோனதன் கிசே திரைக்கதை எழுதுகிறார். ஆனால் யார் இயக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த படம் பற்றி பேசி உள்ள திரைக்கதை ஆசிரியர் கீசே இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த படம் அமையும் என தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைப் பற்றிய மேலும் தகவல்கள் அடுத்த சில நாட்களில் வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க – டைட்டைன் நீர்மூழ்கி நிறுவனத்தின் அடுத்த பிளான் இதுதான்..! வீனஸ் கிரகத்துக்கு போலாமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours