“ரொம்ப தன்மையான மனிதர்” – வி.ஏ. துரை மறைவு குறித்து கலங்கும் இயக்குநர் கே.செல்வபாரதி |direcotr k.selvabharathi shared his memories with producer v.a.durai

Estimated read time 1 min read

விக்ரம், விஜயகாந்த் தவிர சத்யராஜை வைத்தும் சில படங்களைத் தயாரித்துள்ளார் துரை. ‘என்னமா கண்ணு’, ‘விவரமான ஆளு’, ‘லூட்டி’, உள்பட அத்தனையும் மினிமம் கேரண்டி முறையில் தயாரான படங்கள். தயாரிப்பாளர் துரையின் மறைவு குறித்து இங்கே கனத்த மனத்துடன் நினைவுகளை பகிர்கிறார் ‘விவரமான ஆளு’ படத்தின் இயக்குநரான கே.செல்வபாரதி. விஜய்யின் ‘நினைத்தேன் வந்தாய்’, ‘வசீகரா’ படங்களையும் இயக்கியும், ‘ப்ரியமானவளே’ படத்தின் வசனத்தையும் எழுதியவர் செல்வபாரதி.

கே.செல்வபாரதி

கே.செல்வபாரதி

”தயாரிப்பாளர் துரை சாரின் மறைவு தனிப்பட்ட முறையிலும் எனக்கு இழப்பு தான். அருமையான மனிதர். தன்மையா பழகுவார். நான் விஜய் படங்கள் இயக்கிட்டு இருக்கும் போது என்னிடம் வந்தார். ‘சின்ன பட்ஜெட்ல ஒரு படம் தயாரிக்க விரும்புறேன். நீங்க இயக்குவீங்களா?’ என பணிவா அவர் கேட்ட விதம், இன்னமும் என் மனசுக்குள்ல நிற்குது.

திட்டமிடல்ல அவர் கெட்டிக்காரர். அந்த சமயத்துல ‘இன்று பாடல் பதிவுடன் படப்பிடிப்பு ஆரம்பம்’னு பாடல் பதிவை முடிச்சிட்டுத்தான் படப்பிடிப்புக்கே கிளம்புவோம். ஆனா, துரை சார், ‘பாடல் ரெக்கார்ட்டிங்கை அப்புறமா பாத்துக்கலாம். வசன போர்ஷன்கள் முழுவதையும் முடிச்சிட்டுத்தானே பாடலை படமாக்குவீங்க. அந்த டைம்ல நாம பாடல் பதிவை பண்ணிக்கலாம்’னு சொல்லி, பாடல் பதிவுக்கான பணத்தை படப்பிடிப்புக்கு பயன்படுத்துவார். சிறந்த நிர்வாகி.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours