ரஜினி 170 – முதல் முறை ரஜினியுடன் நடிக்கும் நடிகைகள் – Rajini 170

Estimated read time 1 min read

ரஜினி 170 – முதல் முறை ரஜினியுடன் நடிக்கும் நடிகைகள்

03 அக், 2023 – 10:28 IST

எழுத்தின் அளவு:


Rajini-170---First-time-actresses-with-Rajini

தமிழ் சினிமா உலகில் புதிதாக எந்த ஒரு நடிகரோ, நடிகையோ அறிமுகமானாலும் அவர்கள் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்துவார்கள். பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அதே சமயம் சில வளரும் நடிகைகளுக்கு அப்படி அமைவது அதிர்ஷ்டம் தான்.

‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு தசெ ஞானவேல் இயக்க உள்ள ரஜினியின் 170வது படம் பற்றிய அப்டேட்டுகள் கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகையும் ‘அசுரன்’ படக் கதாநாயகியுமான மஞ்சு வாரியர், ‘சார்பட்டா பரம்பரை, கழுவேத்தி மூர்க்கன், அநீதி’ படங்களின் கதாநாயகி துஷாரா விஜயன், ‘இறுதிச் சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை’ படங்களின் கதாநாயகி ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ரஜினியுடன் இணைந்து நடிப்பது பற்றி துஷாரா விஜயன், “ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரித்திகா சிங், “அடடா, இப்போது என் கண்ணீரை என்னால் பார்க்க முடியவில்லை… ரஜினி சாருடன் நடிப்பதில் கிடைத்த வாய்ப்பு, மற்றும் தலைவர் 170 குழுவினருடன் இணைந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பு எனது கனவுகளிலிருந்து நேராக வந்துள்ளது. இந்த வாய்ப்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன், என்ன ஒரு தருணம்,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தயாரிப்பு நிறுவனம் பதிவிட்ட டுவீட்டை மட்டும் பகிர்ந்துள்ளார் மஞ்சு வாரியர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours